
Championship Trophy 2025: AFG vs ENG போட்டியில் ஜோ ரூட்டின் அதிரடி சதம்…!! ஓமர்ஜாய் படைத்த புதிய சாதனை…!! முழு விவரம் உள்ளே..!!
1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பிறகு பாகிஸ்தான் நடத்தும் சர்வதேச போட்டியான 2025 சாம்பியன்ஸ் டிராபி தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
அதாவது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று (26-02-2025) நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். அது, மட்டுமின்றி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து மூன்றாவது அணியாக இங்கிலாந்து தற்போது வெளியேறி இருக்கிறது.

























