CGCRI மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலை – ITI, Diploma தேர்ச்சி போதும்..!

0
CGCRI மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலை - ITI, Diploma தேர்ச்சி போதும்..!
CGCRI மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலை - ITI, Diploma தேர்ச்சி போதும்..!
CGCRI மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலை – ITI, Diploma தேர்ச்சி போதும்..!

மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CGCRI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technician, Technical Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Glass and Ceramic Research Institute (CGCRI)
பணியின் பெயர் Technician, Technical Assistant
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

CGCRI காலிப்பணியிடங்கள்:

Technician பணிக்கு 32 பணியிடங்கள்

Technician Assistant பணிக்கு 38 பணியிடங்கள் என மொத்தமாக 70 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

CGCRI தகுதி விவரங்கள்:

Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் ITI முடித்திருப்பது அவசியமாகும்.

Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

CGCRI வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் என்றும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் என்றும், PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என்றும், PWD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள் என்றும், PWD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் என்றும், வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CGCRI ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் Technician பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரையும், Technician Assistant பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையும் மாத ஊதியம் பெறுவார்கள்.

CGCRI தேர்வு முறை:

விண்ணப்பித்தவர்களில் Trade Test மற்றும் OMR Based அல்லது computer Based Objective Type Multiple Choice Examination (Paper-I, Paper-II and Paper-III) மூலம் இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

CGCRI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here