தமிழக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – CEO செயல்முறைகள்!

0
தமிழக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - CEO செயல்முறைகள்!
தமிழக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - CEO செயல்முறைகள்!
தமிழக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – CEO செயல்முறைகள்!

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டுக்காக மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள்:

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020 – 2021ம் கல்வியாண்டுக்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் அதனை தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற காரணங்களால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும், மே மாதத்தில் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவர் சேர்க்கை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ஜூன் 28 முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை – தலைமை பதிவாளர் அறிவிப்பு!

பள்ளிக் கல்வித் துறை கடந்த வாரம் முதல் மீண்டும் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்கியுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக தலைமை ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு செல்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 லட்சம் புதிய மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது. நடப்பு ஆண்டிலும் அதிக மாணவர்கள் சேர்க்கைக்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், காலை 9 மணி முதல் 9:15 குள் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர் சேர்க்கைக்காக வருபவர்களை காக்க வைக்க கூடாது. கால தாமதமாக வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!