தமிழகத்தில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை – CEO அதிரடி நடவடிக்கை!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததால் 21 பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு நோட்டிஸ்:
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல் திட்டத்தின் கீழ் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி அரசு விடுமுறை காரணமாக அன்று (02-04-2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை (03-04-2021) பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு சனிக்கிழமையன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை – வெளியான தகவல்!!
இந்த பள்ளிகள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதியின் கீழ் ஒழுங்கு நடவடிக்கையாக விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி நோட்டிஸ் குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு பள்ளிகளின் தலைமையாசிரியருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
ATM ACCOUNT NEW APPLY