வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – CEO திட்டம்!

0
வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - CEO திட்டம்!
வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - CEO திட்டம்!
வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – CEO திட்டம்!

ப்ரோக்கிங் நிறுவனமான ஜீரோதாவின் 1100 ஊழியர்களில் கிட்டத்தட்ட 950 பேர் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்று CEO மற்றும் இணை நிறுவனர் நிதின் காமத் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பணியாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.

நிரந்தர WFH முறை:

Zerodha இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட்அப்களில் ஒன்றாகும். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒரு பைசா கூட திரட்டாத சில இந்திய யூனிகார்ன்களில் ஒன்றாகும். கூடுதலாக இந்த நிறுவனம் லாபகரமாக செயலாற்றுகிறது. மேலும் நிறுவனத்தின் தலைவர்கள் நிதின் காமத் மற்றும் நிகில் காமத் இருவரும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சதவீதத்தை வைத்திருக்கிறார்கள். இது ஆகஸ்ட் 2010 இல் நிறுவப்பட்டது மற்றும் இன்று இந்தியாவின் மிகப்பெரிய பங்குத் தரகராக உள்ளது, 9 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் நாட்டின் சில்லறை வர்த்தக அளவுகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இது ரெயின்மேட்டர், ஃபின்டெக் ஃபண்ட் மற்றும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்த இன்குபேட்டரையும் இயக்குகிறது.

TN TET ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – TRB முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்றுநோய் காரணமாக பல அலுவலகங்கள் மற்றும் பணியிடங்கள் ஊரடங்கு நிலையினால் மூடப்பட்ட பின்னர் நிறுவனம் தனது நடவடிக்கைகளை ஆன்லைனில் மாற்றியது. வீட்டிலிருந்து பணிபுரியும் அதன் ஊழியர்களுக்காக, நிறுவனம் கர்நாடகாவின் சிறிய நகரங்களில் துணை அலுவலகங்களை அமைக்கத் தொடங்கியுள்ளதாக ப்ரோக்கிங் நிறுவனமான ஜீரோதா நிறுவனத்தில் CEO மற்றும் இணை நிறுவனர் நிதின் காமத் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் ப்ரோக்கிங் நிறுவனமான ஜீரோதாவின் 1100 ஊழியர்களில் கிட்டத்தட்ட 950 பேர் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிறுவனம் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிக்கு அளித்த பேட்டியில், கோர் டீம் ஹைப்ரிட் மாடலில் வேலை செய்யும் என்று கூறினார். “எங்கள் குழுவில் 85-90% ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறோம், நாங்கள் தொடர்ந்து செய்வோம். கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் புதிய அலுவலகத்தையும் அமைத்துள்ளோம். நாங்கள் வீட்டிலிருந்து நிரந்தர வேலையைச் செய்வோம்” என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!