தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO சுற்றறிக்கை!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - CEO சுற்றறிக்கை!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - CEO சுற்றறிக்கை!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO சுற்றறிக்கை!

வேலூர் மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாரியர்களுக்கான ஆய்வு கூட்டம் (24.05.2021) அன்று நடைபெற்றது. இதில் பள்ளிகள் திறப்பிற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை விளக்கினார்.

CEO சுற்றறிக்கை

தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளாள் நிலையில் வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் முதல் கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பிற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலரால்‌ அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.

TCS நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு, திறமைக்கு மதிப்பு – COO சுப்ரமணியம்!

ஒவ்வொரு பள்ளியின்‌ தலைமை ஆசிரியரும்‌ தங்கள்‌ பள்ளியில்‌ தலைமை பண்புடன்‌ செயல்படவும்‌, பள்ளியில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்‌ சார்ந்து முன்னரே திட்டமிட்டு செயல்படவும்‌ தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள்‌ நலன்‌ மிகவும்‌ முக்கியம்‌ என கருதி, பள்ளி திறக்கும்‌ நாள்‌ முன்னரே பள்ளிகளின்‌ சுற்றுபுறங்கள்‌, மைதானங்கள்‌, வகுப்பறைகள்‌, பள்ளியில்‌ உள்ள மேஜை, நாற்காலிகள்‌ நன்முறையில்‌ சுத்தம்‌ செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்‌.

மாணவர்களின்‌ விவரங்கள்‌ தங்கள்‌ பள்ளியின்‌ EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யும்‌ பணிகள்‌ சார்ந்த வகுப்பு ஆசிரியரால்‌ மேற்கொள்ளப்படவேண்டும்‌. COMMON POOL லில்‌ தங்கள்‌ பள்ளியை சேர்ந்த மாணவர்கள்‌ உள்ளனரா என கண்டறிந்து, தங்கள்‌ பள்ளியின்‌ EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யும்‌ பணி வகுப்பு ஆசிரியரால்‌ மேற்கெள்ளப்பட வேண்டும்‌.

வரும்‌ நாட்களில்‌ ஆசிரியர்கள்‌ / மாணவர்கள்‌ சார்ந்த அனைத்து விவரங்களும்‌ EMIS மூலமாக மட்டுமே ஆணையரகத்தால்‌ எடுக்கப்படவுள்ளதால்‌, EMIS இணையதளத்தில்‌ தங்கள்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்‌ / ஆசிரியர்கள்‌) ஆசிரியரல்லாத பணியாளர்கள்‌ ,மாணவர்கள்‌ சார்ந்த விவரங்கள்‌ வெள்ளிக்கிழமைக்குள்‌ (27.08.2021) UPDATE செய்யப்படவேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டது.

4. 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு முடித்து வெளியில்‌ செல்லும்‌ மாணவர்களுக்கு EMIS மூலமாக தான்‌ மாற்றுச்‌ சான்றிதழ்‌ வழங்கப்படவேண்டும்‌. மேலும்‌, வரும்‌ நாட்களில்‌ அனைத்து விவரங்களும்‌ EMIS மூலமாக எடுக்கப்படவுள்ளதால்‌, தலைமை ஆசிரியர்கள்‌ தங்கள்‌ பள்ளியின்‌ EMIS இணையதளத்தில்‌ பள்ளிச்‌ சார்ந்த விவரங்கள்‌, ஆசிரியர்கள்‌,ஆசிரியரல்லாத பணியாளர்கள்‌ சார்ந்த விவரங்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ சார்ந்த விவரங்கள்‌ உடனுக்குடன்‌ சரி செய்யவும்‌, பள்ளி திறப்பதற்கு முன்னர்‌ பள்ளிகளில்‌ மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள்‌ சார்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு விவரத்தினை 27.08.2021க்குள்‌ முடிக்க முதன்மைக்‌ கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

  • பள்ளியின்‌ அனைத்து வகை ஆசிரியர்களும்‌ கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா என உறுதி செய்யப்படவேண்டும்‌.
  • பள்ளியின்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்கள்‌ எண்ணிக்கையின்படி ஒன்று / இரண்டு தடுப்பூசிகள்‌ போடப்பட்டவர்கள்‌ விவரம்‌ தலைமை ஆசிரியர்‌ அறையில்‌ வைக்கப்பட்டிருக்க வேண்டும்‌.
  • 501 அறிவுரையின்படி ஆசிரியர்கள்‌ / ஆசிரியரல்லாத பணியாளர்கள்‌ தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்கள்‌ வெள்ளிக்கிழமை (27.08.202)க்குள்‌ தலைமை ஆசிரியரிடம்‌ ஒப்படைக்கப்படவேண்டும்‌.
  • கொரோனா தொற்று நிமித்தமாக அநேக நாட்களுக்கு பிறகு பள்ளிகள்‌ திறக்கப்பட்டு, மாணவர்கள்‌ பள்ளிக்கு வருகை புரிகிறார்கள்‌. இவர்களை ஊக்குவிக்கும்‌ விதமாக அரசால்‌ வழங்கப்பட்ட Refresh course பாடத்திட்டத்தை முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌ இணையதளத்தில்‌ upload செய்யப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு ஆசிரியருக்கும்‌ பிரதிகள்‌ எடுத்துக்கொடுத்து அதில்‌ சொல்லப்பட்ட விவரங்களை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்‌. இப்பயிற்சி 45 நாட்கள்‌ நடத்தப்படவேண்டும்‌.
  • EMIS இணையதளத்தில்‌ மிக முக்கியமாக செய்யப்பட வேண்டிய பணிகள்‌
    பள்ளியின்‌ அமைவிடம்‌, கட்டிடங்கள்‌ போன்ற விவரங்கள்‌ அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்‌. teachers portal – பள்ளியில்‌ பணிபுரியும்‌ அனைத்து ஆசிரியர்கள்‌ சார்ந்த விவரங்கள்‌ அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்‌. மேலும்‌ தங்கள்‌ பள்ளியில்‌ பணிபுரியும்‌ அனைத்து ஆசிரியர்களின்‌ விவரங்கள்‌
  • விடுபடாமல்‌ உள்ளதா என்றும்‌, மாறுதலில்‌ சென்ற ஆசிரியர்கள்‌ மாவட்ட ஆட்சியரின்‌ ஆலோசனைப்படி பள்ளிகள்‌ அமைந்துள்ள பகுதியின்‌ வட்டார வளர்ச்சி அலுவலர்களை தெடர்பு கொண்டு நூறு நாள்‌ பணியில்‌ உள்ளவர்களை பள்ளிகளை சுத்தம்‌ செய்ய வேண்டிய பணிகளில்‌ ஈடுபடுத்திக்‌ கொள்ள தெரிவிக்கப்பட்டது.
  • பள்ளிகளின்‌ சுவர்கள்‌ சுத்தம்‌ செய்யப்படுவதோடு வண்ணம்‌ பூசுதல்‌ மராமத்து பணிகள்‌ போன்றவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட தெரிவிக்கப்பட்டது.
  • பள்ளி திறக்கும்‌ முன்னரே அதாவது 3108.2021க்குள்‌ பள்ளிகளை சுத்தம்‌ செய்யப்படவேண்டிய பணிகள்‌ முடிக்கப்படவேண்டும்‌.

TN Job “FB  Group” Join Now

  • பள்ளிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுக்கள்‌ ஆய்வு அலுவலர்கள்‌ தலைமையில்‌ பள்ளிகளில்‌ ஆய்வு மேற்கொள்ள வரும்‌ முன்னரே சுத்தம்‌ செய்யும்‌ பணிகள்‌ முடிக்கப்பட்டிருக்க வேண்டும்‌.
  • பள்ளி திறக்கும்‌ நாளான 01.09.2021 அன்று பள்ளிக்கு வருகை தரும்‌ மாணவர்கள்‌ நலன்‌ கருதி, கிருமி நாசினி மற்றும்‌ முகக்கவசம்‌ தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. மாணவர்கள்‌ பயன்படுத்‌தும்‌ மேசை மற்றும் நாற்காலிகள் ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம்‌ செய்யப்பட தெரிவிக்கப்பட்டது.
  • ஆன்லைன் மூலமாக நடந்து முடிந்த அலகு தேர்வின்‌ விடைத்தாள்கள்‌ பள்ளியில்‌ சேகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும்‌ முன்னர்‌ அவ்விடைத்தாட்கள்‌ மதிப்பீடு செய்யப்பட்டு, மாணவர்கள்‌ வருகை புரியும்‌ அன்று மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்‌.
  • மாவட்டக்‌ / முதன்மைக்‌ கல்வி அலுவலகங்களின்‌ இணையதளத்தை ஒவ்வொரு நாளும்‌ பார்த்து ஆய்வு அலுவலர்களால்‌ கோரப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட நேரத்தில்‌ முடிக்கப்பட்டதா என ஒவ்வொரு நாளும்‌ தலைமைஆசிரியர்களால்‌ உறுதி செய்யப்பட வேண்டும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!