மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு 2022 – முழு விபரங்கள் இதோ!

0
மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு 2022 - முழு விபரங்கள் இதோ!
மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு 2022 - முழு விபரங்கள் இதோ!
மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு 2022 – முழு விபரங்கள் இதோ!

இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை குறித்து பார்ப்போம்.

நுழைவுத் தேர்வு:

இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் கட்டாயம் என்று யூஜிசி அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது நாடு முழுவதும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதன்படி தற்போது பொது நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இத்தேர்வு தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இளநிலை பொது நுழைவுத் தேர்வு வருகிற ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு இந்தியா முழுவதும் 554 நகரங்களிலும் மற்றும் இந்தியாவிற்கு வெளியே 13 நகரங்களிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மே 31ம் தேதி அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மொத்தம் 16 நாட்களுக்கு விடுமுறைகள் அறிவிப்பு!

ஆனால் இத்தேர்வு ஒரே ஒரு முறை நடத்தப்படும் என்பதால் விண்ணப்பதார்கள் மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூன் 23,24 ஆகிய தேதிகளில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தேர்வு முகமை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அத்துடன் ஏற்கனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பெற விரும்பும் தேர்வர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 011-40759000 / 011-6922 7700 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here