மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஏப்ரல் மாதத்தில் அகவிலைப்படி (DA)!
மத்திய அரசுத் துறையை சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் அகவிலைப்படி (DA) தொகை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 34% ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை எப்போது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தற்போது அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசுத் துறையை சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் அகவிலைப்படி (DA) தொகை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் 2022 ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படியை (DA) பெற உள்ளனர்.
ESIC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,42,400/- || விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாள் !
இது தொடர்பான ஊடக அறிக்கையின்படி, மத்திய அரசின் அகவிலைப்படி தொடர்பான முடிவை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்த இந்திய ரயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குமாறு இந்திய ரயில்வே தனது அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பி இருப்பதாக ஊடக அறிக்கைகள் கூறியுள்ளது.மேலும், 2022 ஏப்ரல் இறுதிக்குள் ரயில்வே ஊழியர்கள் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையால் இந்திய ரயில்வேயின் 14 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கையால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு அகவிலைப்படியை (DR) உயர்த்தியுள்ளதால், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும். இந்த பெரிய முடிவால் சுமார் 65 லட்சம் ஓய்வூதியர்கள் லாபம் அடைவார்கள்.