15 ஆண்டுகள் பழமையான வாகனத்திற்கு தடை – மத்திய அமைச்சர் தகவல்!!

0
15 ஆண்டுகள் பழமையான வாகனத்திற்கு தடை - மத்திய அமைச்சர்
15 ஆண்டுகள் பழமையான வாகனத்திற்கு தடை - மத்திய அமைச்சர்
15 ஆண்டுகள் பழமையான வாகனத்திற்கு தடை – மத்திய அமைச்சர் தகவல்!!

சுமார் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை தடை செய்வதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வாகனத்திற்கு தடை

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது. அதே நேரத்தில், பழைய வாகனங்களின் பயன்பாடும் அதிகளவு காணப்படுகிறது. இப்படி பழைய வாகனங்களை உபயோகிப்பதால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்க மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – பிப்ரவரி 1 முதல் சேவை நிறுத்தம் !!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு காரணமாக சுற்றுசூழல் பாதிக்கப்படக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எத்தனால், மெத்தனால், பயோ CNG, பயோ LNG போன்ற எரிபொருளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!