நாட்டில் 8 யூடியூப் சேனல்களுக்கு தடை – மத்திய தகவல் & ஒளிபரப்புத்துறை அறிவிப்பு வெளியீடு!

0
நாட்டில் 8 யூடியூப் சேனல்களுக்கு தடை - மத்திய தகவல் & ஒளிபரப்புத்துறை அறிவிப்பு வெளியீடு!
நாட்டில் 8 யூடியூப் சேனல்களுக்கு தடை - மத்திய தகவல் & ஒளிபரப்புத்துறை அறிவிப்பு வெளியீடு!
நாட்டில் 8 யூடியூப் சேனல்களுக்கு தடை – மத்திய தகவல் & ஒளிபரப்புத்துறை அறிவிப்பு வெளியீடு!

நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக மக்களிடத்தில் தவறான செய்திகளை சில Youtube Channel வெளியிட்டு வந்தன. அதனால் இது போன்ற Youtube Channel-ஐ முடக்கியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Youtube Channel

பொதுவாக சமூக வலைதளங்களில் பரப்படும் தகவல்களை பொதுமக்கள் அதிகம் பார்கின்றனர். மேலும் இந்த தகவல்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிகிறது. இந்த நிலையில் சில Youtube Channel-கள் நாட்டின் பாதுகாப்பு பற்றியும், வெளிநாட்டு உறவுகள் பற்றியும், அரசு நலத்திட்டங்கள் பற்றியும் தவறுதலாக தகவல்களை பரப்பி வருகின்றனர். அதாவது, இந்திய அரசு மதரீதியான கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அத்துடன் பண்டிகைகளைக் கொண்டாடத் தடை விதித்துள்ளதாகவும் வீடியோகளை சித்தரித்து வெளியிட்டுள்ளன.

மேலும் இந்தியாவில் மதப்போர் நடப்பது போன்ற வீடியோக்கள் சித்தரித்து வெளியிட்டு வருகின்றன. இந்த வீடியோக்களை பொதுமக்கள் பார்ப்பதால் சமூக நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை, நாட்டின் அமைதி உள்ளிட்டவை பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பரப்பிய Youtube Channel-களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் வகையில் Youtube Channel ஒன்று, பேஸ்புக் கணக்கு, 2 பேஸ்புக் போஸ்ட் ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 2 அப்டேட்கள் அறிமுகம்!

இந்த 8 யூடியூப் சேனல்களில் 114 கோடி Views மற்றும் 85 லட்சம் Subscribers உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரிலிருந்து இதுவரை 102 Youtube Channel , நியூஸ் சேனல்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வகையான முடக்கங்களும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததால் உடனடியாக அரசு முடக்கியுள்ளது. மேலும் இது போன்று தவறான செய்திகளை பரப்பும் சேனல்களை முடக்க அரசு தயாராக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!