மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து வரும் நல்ல செய்தி – வெளியான தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அத்துடன் சில கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெளியான தகவல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதாவது அகவிலைப்படி 46% உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அதனுடன் மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை தொகையும் (HRA) விரைவில் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் நவ. 18 சட்ட மன்ற சிறப்பு கூட்டத்தொடர் – வெளியான முக்கிய தகவல்!
ஏற்கனவே அகவிலைப்படி உயர்வு தீபாவளி பரிசாக வந்தது, அதனை தொடர்ந்து தற்போது புத்தாண்டு பரிசும் வந்துள்ளது. சமீபத்திய AICPI குறியீட்டு தரவு 48.54 சதவீதத்தை 137.5 புள்ளிகளில் எட்டியிருப்பதால், வரவிருக்கும் மாதங்களில் DA இல் மேலும் 4-5 சதவீதம் உயர வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணப்படியும் (travel allowances) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.