புத்தகப்பைக்கு இனி டாட்டா !! – மாணவர்களுக்கு வீட்டுபாடமும் கிடையாது !!

0
புத்தகப்பைக்கு இனி டாட்டா !! - மாணவர்களுக்கு வீட்டுபாடமும் கிடையாது !!
புத்தகப்பைக்கு இனி டாட்டா !! - மாணவர்களுக்கு வீட்டுபாடமும் கிடையாது !!

புத்தகப்பைக்கு இனி டாட்டா !! – மாணவர்களுக்கு வீட்டுபாடமும் கிடையாது !!

இந்தியாவில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தற்போது மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அந்த அறிவிப்பினை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

புத்தகப்பை !

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அன்றாடம் அவரவர்களின் புத்தகப்பைகளை தூக்கி சுமந்த வண்ணம் தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். வகுப்புகள் மேலே செல்ல செல்ல புத்தகப்பையின் எடையும் கணமும் அதிகரிக்கிறது. வேறு வழியில்லாமல் மாணவர்கள் அதனை தூக்கி சுமந்துகொண்டு உள்ளனர். இதனை சரி செய்ய அரசு முப்பருவ பாடத்திட்டம் போன்று பல திட்டங்கள் செயல்படுத்தியது. இருப்பினும் சுமைகள் முழுவதுமாக குறைக்கப்படவில்லை.

TN Police “FB Group” Join Now

தற்போது இந்த நிலையினை சரிசெய்ய மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புத்தகப்பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமில்லாது 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் வழங்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புகள் !!
  • புத்தகப்பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும்
  • ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன்மீது குறிப்பிடப்பட வேண்டும்
  • பள்ளிப் பைகளின் அதிகபட்ச எடை மாணவரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்
  • பள்ளிகளில் லாக்கர்கள், பையின் எடையை சரிபார்க்க டிஜிட்டல் எடை இயந்திரம் இருக்க வேண்டும்.
  • மாணவர்கள் சக்கர கேரியர் அல்லது டிராலி பேக் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும்.
  • இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது.
  • பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய வசதிகள், மதிய உணவு போன்றவை போன்றவை போதுமானதாகவும், நல்ல தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளிப் பையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அல்லது அதன் அளவைக் குறைப்பதற்காக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் எளிதாக அணுகக்கூடிய அளவில் நல்ல தரமான குடிநீரை வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here