மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்வு? – மத்திய அரசு!
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து சமீபத்தில் அறிவிப்புகள் வெளிவந்த நிலையில், ஊழியர்களுக்கான மாத அடிப்படை ஊதியமும் உயர்த்தப்படுவதாக எழுந்துள்ள தகவலுக்கு மத்திய நிதியமைச்சர் பதில் அளித்துள்ளார்.
அடிப்படை ஊதிய உயர்வு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு அகவிலைப்படி மற்றும், ஓய்வூதிய படிகளை கொரோனா பெருந்தொற்று காரணமாக நிலுவையில் வைத்தது. கொரோனா தொற்று சமயத்தில் நாட்டில் அதிக செலவுகள் இருப்பதாகவும், ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் சரிவடைந்து இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இதனால் கடந்த 2020 ஜனவரி 1 முதல் 3 தவணைகளாக அகவிலைப்படி உயர்வினை நிலுவையில் வைத்தது.
ஜூலை 29 டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவிற்கான அட்டவணை நேரம் – தவறாமல் படிங்க!
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வுதாரர்களுக்கான ஓய்வூதிய படிகள் அனைத்தும் 11% உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 2021 ஜூலை முதல் இந்த உயர்வு அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து மற்ற பலன்களும் ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு வாடகைக்கான படியும் (HRA) தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் மாத அடிப்படை ஊதியம் உயர்த்தப்படுவதாக இன்று பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
அதற்கு, நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இதுபோன்ற எந்த திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், 7 வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய வரைமுறைப்படி ஊழியர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறினார். மேலும், ஜூலை 1 முதல் அகவிலைப்படி 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், அதனை சார்ந்த மற்ற படிகளும் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.