மத்திய அரசின் NCC சீரமைப்பு உயர்மட்ட குழு – மகேந்திர சிங் தோனிக்கு இடம்!

0
மத்திய அரசின் NCC சீரமைப்பு உயர்மட்ட குழு - மகேந்திர சிங் தோனிக்கு இடம்!
மத்திய அரசின் NCC சீரமைப்பு உயர்மட்ட குழு - மகேந்திர சிங் தோனிக்கு இடம்!
மத்திய அரசின் NCC சீரமைப்பு உயர்மட்ட குழு – மகேந்திர சிங் தோனிக்கு இடம்!

இந்தியாவில் தேசிய மாணவர் படையை (NCC) மேம்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள MP பைஜயந்த் பாண்டா தலைமையிலான உயர்மட்ட குழுவில் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய குழுவில் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான டோனி தற்போது NCC சீரமைப்பு குழுவில் இடம்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்த டோனி, தற்சமயம் இந்தியன் பிரிமியர் லீக் (IPL) போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இது தவிர வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்காலிக அரசு ஊழியர்களும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம் – தமிழக அரசு!

இதற்கு மத்தியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (MoD), உருவாக்கிய உயர்மட்ட குழுவில் டோனிக்கு இடம் கொடுத்துள்ளது. அதாவது தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC)ல் சில விரிவாக்கங்களை ஏற்படுத்துவது தொடர்பாக முன்னாள் MP பைஜயந்த் பாண்டா தலைமையில் ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த உயர்மட்ட குழுவில் MS டோனி, MP வினய் சஹஸ்ரபுத்தே மற்றும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பங்கேற்க என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ICC T20 தரவரிசை பட்டியல்: விராட் கோஹ்லி, கேஎல் ராகுல் மாற்றமில்லை! ரசிகர்கள் ஷாக்!

இதில் டோனி, ஏற்கனவே இந்திய இராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர புகழ்பெற்ற பாராசூட் ரெஜிமெண்டிலும் அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக இராணுவப் பயிற்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவின் மற்றுமொரு உறுப்பினர் பதவியில் நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான மஹிந்திரா உறுப்பினராக ஏற்படுத்தப்பட்டுள்ளார். சமீபத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் வணிகத் தளபதிகளின் குழுவில் மஹிந்திரா ஒரு முக்கிய பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!