NET தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு வேலை – வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
NET தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு வேலை - வெளியான சூப்பர் அறிவிப்பு!!
NET தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு வேலை - வெளியான சூப்பர் அறிவிப்பு!!
NET தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு வேலை – வெளியான சூப்பர் அறிவிப்பு!!

மத்திய அரசு நிறுவனங்களின் உள்ள காலிப்பணியிடங்களுக்கு UGC நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

காலிபணியிடங்கள்:

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் இயங்கும் Power Grid, CTUIL, Damodar Valley Corporation ஆகிய நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதில் Assitant Officer Trainee (HR) / Management Trainee (HR) உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேற்கண்ட நிறுவனங்களில் மொத்தமுள்ள 35 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MBA in HR மற்றும் Personnel Management & Industrial Relations/ Social Work/ HRM and Labour Relations/ Labour and Social Welfare ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதியை மீறிய பெண்ணின் ஓட்டுநர் உரிமம் ரத்து? காவல்துறை பரிந்துரை!!

மேலும் இப்பணிக்கு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள நெட் தேர்வில் Industrial Relations/ Labour & Social Welfare/ Human Resources Management பாடங்களில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நெட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணை பொறுத்து குழு தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு https://www.powergrid.in/  என்ற இணையதளம் வாயிலாக பிப்.11 தேதி முதல் மார்ச். 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notification

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!