மத்திய அரசின் ஜேஇஇ தேர்வு – அரங்கேறிய மோசடிகள்! CBI விசாரணை!

0
மத்திய அரசின் ஜேஇஇ தேர்வு - அரங்கேறிய மோசடிகள்! CBI விசாரணை!
மத்திய அரசின் ஜேஇஇ தேர்வு - அரங்கேறிய மோசடிகள்! CBI விசாரணை!
மத்திய அரசின் ஜேஇஇ தேர்வு – அரங்கேறிய மோசடிகள்! CBI விசாரணை!

இந்தியாவில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர மத்திய அரசால் ஆண்டுதோறும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஜேஇஇ மெயின்ஸ்:

இந்தியாவில் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இத்தேர்வானது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு JEE தேர்வு 2 கட்டங்களாக, அதாவது ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்பட்டது. மேலும் தேர்வானது கடந்த ஜூலை 25ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்த கட்டமாக ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும். 2022ம் ஆண்டுக்கான ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வில் மோசடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு குற்றஞ்சாட்டப்பட்ட ரஷிய நபரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதாவது இணையவழியில் நடைபெற்ற ஜேஇஇ மெயின்ஸ் தோ்வில் அஃபினிட்டி எஜுகேஷன் என்ற தனியாா் நிறுவனம் தேர்வெழுதிய நபர்களின் கணினிகளை Remote access மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மோசடியில் ஈடுபட்டது.

காவல் துறையில் பணியாற்ற வேண்டுமா? இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறந்த Study Materials!!

Exams Daily Mobile App Download

இதில் தேர்வர்களுக்கு பதிலாக, வெளியிலிருந்து இவர்கள் பதிலளிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கி தேர்வை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், தங்கள் பாதுகாப்புக்காக ஜேஇஇ தேர்வில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களிடமிருந்து 10,12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வாங்கி வைத்துக் கொண்டுள்ளதும், கல்வி நிலையங்களில் சேர்க்கை கிடைத்ததும் 12 முதல் 15 லட்சம் பெற்றுக் கொள்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!