மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத தவணைக்கான DA நிலுவைத்தொகை? புதிய சிக்கல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத தவணைக்கான DA நிலுவைத்தொகை? புதிய சிக்கல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத தவணைக்கான DA நிலுவைத்தொகை? புதிய சிக்கல்!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த ஒன்றரை வருடத்திற்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA நிலுவைத்தொகை

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா காரணமாக சுமார் 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA நிலுவைத் தொகை கிடைக்காது என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை பிடித்தம் செய்யப்பட்ட டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் கடந்த 18 மாத டிஏ பாக்கிக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். அதாவது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தால் முடக்கப்பட்ட ஒன்றரை வருடத்திற்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த சிந்தனையும் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – TET புதிய பாடத்திட்ட விபரங்கள் வெளியீடு!

கொரோனா தொற்றுநோய்களின் போது நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலை நிவாரணத் தொகையை விடுவிக்க வேண்டிய ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஆர் (ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு) மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை சுமார் ரூ.34,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, ஓய்வூதிய விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான தன்னார்வ முகமைகளின் நிலைக்குழுவின் 32வது கூட்டத்தில், செலவினத் துறையின் பிரதிநிதி, முந்தைய டிஏ மற்றும் டிஆர் நிலுவைகள் விடுவிக்கப்படாது என்று தெளிவுபடுத்தினார்.

இது குறித்து பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஓய்வூதிய நலத்துறை, ஓய்வூதியர்களின் நலனைக் கவனித்து அவர்களின் குறைகளை பல நிலைகளில் தீர்த்து வருகிறது. ஆனால், DA மற்றும் DR விநியோகம் அமைச்சகத்தின் கீழ் வராது. இருப்பினும், கடைசியாக உயர்த்தப்பட்ட மூன்று தவணை டிஏ மற்றும் டிஆர் தொகையை ஜூலை 1 முதல் அரசாங்கம் வெளியிட்டது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1ல் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், மார்ச் 2022ல் அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

முல்லையை பார்த்து வருத்தப்படும் கதிர், சீக்கரம் டிரீட்மென்ட் தொடங்க சொல்லும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

தோராய மதிப்பீட்டின்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1800 (நிலை-1 அடிப்படை ஊதிய அளவு 18000 முதல் 56900 வரை) உள்ள மத்திய பணியாளர்கள் ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்] X 6] நிலுவைத் தொகையை பெறுகின்றனர். அதே நேரத்தில், 7வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.13,656 என கிடைக்கும். ஆனால் ஜூலை முதல் டிசம்பர் 2020 வரையிலான DA நிலுவைத் தொகை ரூ. 3,240 என்ற அடிப்படையில் ரூ.10,242 நிலுவைத் தொகையை பெறுவார்கள். அதே நேரத்தில், ஜனவரி மற்றும் ஜூலை 2021க்கு இடைப்பட்ட காலத்தில் DA நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், ரூ.4,320 என்ற அடிப்படையில் ரூ.13,656 உள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!