மத்திய அரசு ஊழியர்களுக்கு PF அதிகரிப்பு – 7வது சம்பள கமிஷன்!!

7
மத்திய அரசு ஊழியர்களுக்கு PF அதிகரிப்பு - 7வது சம்பள கமிஷன்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு PF அதிகரிப்பு - 7வது சம்பள கமிஷன்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு PF அதிகரிப்பு – 7வது சம்பள கமிஷன்!!

மத்திய அரசு ஊழியர்கள் வெகு நாட்களாக காத்துக்கொண்டு வரும் அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் அரசு ஊழியர்களுக்கு சற்று நிம்மதி வழங்கி வருகிறது.

அகவிலைப்படி உயர்வு:

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பினால் மத்திய அரசு கடுமையான நிதிச்சுமைக்கு உள்ளாகியது. நிதி நிலையை சீர் செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை தற்காலிமாக நிறுத்தியது அரசு. இதனால் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – காவல்துறை வெளியீடு!

அதாவது அவர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரை, ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரை மற்றும் ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரை ஆகிய 3 தவணை அகவிலைப்படியானது நிறுத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகின்ற ஜூலை மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் டிஏ விகிதம் 17% ல் இருந்து 28% (4+3+4) ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

TN Job “FB  Group” Join Now

டிஏ அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் இருப்பு தொகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி ஊதிய மேட்ரிக்சின் படி அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 எனில், அவரது ஊதியம் ரூ.46,260 ஆக அதிகரிக்கும். ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அதிகரிப்பதன் எதிரொலியாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியும் அதிகரிக்கும். அதேபோல் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் தொகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. ஏன் இப்படி தெரிந்த செய்திகள் மற்றும் ஏற்கனவே அறிவித்த செய்திகளையே மறுபடி மறுபடி போட்டு உங்கள் செய்தி களை பாராவண்ணம் செய்கிறீர்கள்.

  2. அய்யா, நடுவண் அரசின் அலுவலர்கள் பணியாளர்கள் ஓய்வூதியர்கள் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம் உயர்வு இன்னும் பிற சலுகைகள் வழங்கப்படுகிறது….
    இந்த நாட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் மிகவும் சொற்ப தொகையை ஓய்வூதியம் பெற்று வருகின்றனர் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதனை பரிசீலனை செய்ய மனம் இல்லாமல் வருங்கால வைப்பு நிதியில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வழிவகை இல்லை என்றும் இது அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவிக்கப்படுகிறது …இந்த அணுகுமுறை சரியா…..ஊடக துறையினருக்கும் இது பொருந்தும்….2000 ரூபாய்க்கு குறைவாக ஓய்வூதியம் பெறும் மூத்தவர்கள் நலனில் அக்கறை செலுத்தி கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…

  3. விலைகள் அகலமாக ஆகி வரும் நிலையில் அகவிலைப்படி பற்றிய புதிய அறிவிப்புகள் இன்னும் வந்த பாடில்லை! அத்தகைய அறிவிப்புகள் அதிகார பூர்வமாக வந்த பிறகு செய்தி வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சி!

    • வேறு செய்திகள் இல்லை.
      பீற்றிக்கொள்ள விசயம் எதுவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!