மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக DA உயர்வு – 7வது ஊதியக்குழு தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக DA உயர்வு - 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக DA உயர்வு - 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக DA உயர்வு – 7வது ஊதியக்குழு தகவல்!

ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 3 சதவீதத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்பட உள்ளதாக 7வது ஊதியக்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7வது ஊதியக்குழு:

மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 2021 ஜூலை 1 வரையிலான காலத்திற்கான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 31% அகவிலைப்படி உயர்வினை அரசு ஊழியர்கள் பெற்று வருகின்றனர். இதற்கான அறிவிப்பு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்டு, அதற்கு முன்னதான ஜூலை 1, 2021 தேதியிட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய ஊழியர்களுக்கு 2022 ஜனவரி தவணைக்கான அகவிலைப்படி உயர்வினை அளிக்க உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு பிப்.18 (வெள்ளிக்கிழமை) விடுமுறை – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 1.08 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் 3 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில், அரசு அதையும் வழங்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – இன்று முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி!

தற்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3.68 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிஏ மற்றும் ஃபிட்மென்ட் காரணி அதிகரித்து வழங்கப்படும் பட்சத்தில் ஊழியர்களின் அடைப்படை சம்பளம் அதிக அளவில் உயரும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டால் முதல் நிலை ஊழியரின் அகவிலைப்படியில் மாதம் ரூ.540 உயர்வு இருக்கும். இதனால் அடிப்படை ஊதியமான ரூ.18,000 பெறும் நபர் அனைத்து படிகளையும் சேர்த்து மொத்தம் 1 மாத மொத்த சம்பளம் ரூ 31,856 ஆக பெறுவார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here