PF வாடிக்கையாளர்கள் இருப்பு தொகை – ஆன்லைனில் அறிந்து கொள்ள வழிமுறை!!

0
PF வாடிக்கையாளர்கள் இருப்பு தொகை - ஆன்லைனில் அறிந்து கொள்ள வழிமுறை!!
PF வாடிக்கையாளர்கள் இருப்பு தொகை - ஆன்லைனில் அறிந்து கொள்ள வழிமுறை!!
PF வாடிக்கையாளர்கள் இருப்பு தொகை – ஆன்லைனில் அறிந்து கொள்ள வழிமுறை!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு பற்றி தெரிந்து கொள்ள ஆன்லைன் மூலம் எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வைப்பு நிதி கணக்கு

தற்போதுள்ள ஆன்லைன் வழிமுறைகள் மக்களின் பல தேவைகளுக்கு எளிதான தீர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு பற்றி அறிந்து கொள்ள செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஊழியர்கள் உமாங் ஆப், சேவா போர்டல், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

அரசின் சேவைகளை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் உமாங் ஆப்பில் EPF பாஸ் மூலம் தொழிலாளர்களின் இருப்பினை தெரிந்து கொள்ள முடியும். மேலும் Unified Portalக்கு பதிலாக www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தொழிலாளர்களின் வைப்பு நிதி பற்றி அறிந்து கொள்ள முடியும்.

ஆன்லைனில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை – எளிய வழிமுறைகள் இதோ!!

EPFO மூலம் பெற்றுக்கொள்ள,

  • www.epfindia.gov.in இந்த இணையதளத்தில் Our Services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு For Employees என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.
  • இதையடுத்து Member Pass Book என்பதை கிளிக் செய்யவும்.
  • அல்லது உங்கள் UAN எண்ணை பதிவு செய்து பாஸ்வேர்டை கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்.
  • பிறகு உங்கள் இருப்பு எண் குறித்த அனைத்தும் கிடைக்கும்.

எஸ்எம்எஸ் மூலம் பெற்றுக்கொள்ள,

  • முதலில் 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • தேவையான மொழியை (ENG) தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

மிஸ்டு கால் மூலம் தெரிந்து கொள்ள,

  • முதலில் UAN எண்ணில் உங்கள் வங்கி கணக்கு, ஆதார், பான் எண் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
  • UAN எண்ணில் பதிவு செய்துள்ள நம்பரிலிருந்து 011-22901406 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

இதன் மூலம் உங்கள் இருப்பு தொகை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!