தீபாவளி பரிசாக பெட்ரோல் விலை குறைப்பு- மத்திய அரசு அறிவிப்பு என்ன??
தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசலின் விலையை ரூ.10 குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
பெட்ரோல் விலை குறைவு:
தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு, ரூ.7,000 வரை போனஸ் என பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி பரிசாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை ரூ.10 குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் கோரிக்கை!!
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டால் அனைத்து வாகன ஓட்டிகளும் அதிகளவில் பயன்பெறுவார்கள். தீபாவளிக்கு முன்பாகவே விலை குறைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.