நாடு முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு – மத்திய அரசு முக்கிய முடிவு!

0
நாடு முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு - மத்திய அரசு முக்கிய முடிவு!
நாடு முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு - மத்திய அரசு முக்கிய முடிவு!
நாடு முழுவதும் ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு – மத்திய அரசு முக்கிய முடிவு!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் அட்டைகள் மூலமாகவே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டு விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் கார்டு விதிமுறைகள்:

அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ரேஷன் அட்டை மூலமாக தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்திய மக்களின் முக்கிய அடையாள ஆவணமாக ரேஷன் அட்டைகள் இருக்கிறது. அடிப்படைத் தேவையான உணவுப் பொருள்களில் இருந்து, மானியம், அரசு நிதி என ரேஷன் அட்டை மூலமாகவே அரசு வழங்குகிறது. அத்தகைய ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

அதன் மூலம் மக்கள் எந்த கடையிலும் பொருள்களை வாங்கி கொள்ளலாம். ஆனால் ரேஷன் அட்டைகள் வைத்திருக்கும் பலருக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதில்லை. அதேபோல, மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் குற்றச்சாடுகளும் அதிகமாக உள்ளன. அதை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன் படி தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போவதையும், தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதைத் தடுக்கவும் புதிய விதிமுறைகளை அமல்படுத்த இருக்கிறது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, இதுகுறித்து மாநில அரசுகளிடமும் கருத்து கேட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் அட்டை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, தகுதியுடைய மக்களுக்கு தங்கு தடையில்லாமல் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் முயற்சியில் மத்திய அரசு இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here