மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022 – ரூ.1 லட்சம் வரை மாத ஊதியம்! A டூ Z விபரங்கள் இதோ!

0
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022 - ரூ.1 லட்சம் வரை மாத ஊதியம்! A டூ Z விபரங்கள் இதோ!
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022 - ரூ.1 லட்சம் வரை மாத ஊதியம்! A டூ Z விபரங்கள் இதோ!
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022 – ரூ.1 லட்சம் வரை மாத ஊதியம்! A டூ Z விபரங்கள் இதோ!

இந்தியாவில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்கான ஊதியம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்புகள்:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட தொழில் சரிவினால் ஏராளமானோர் வேலையிழந்தனர். இந்த வேலையிழப்பால் பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நேரத்தில் அரசு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கொரோனா பாதிப்புகளை குறைத்தது. அதன் பிறகு தொற்று பரவல் குறைய ஆரம்பித்ததும் அரசு வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. மத்திய அரசின் அமைச்சகங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

Exams Daily Mobile App Download

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. கேபினட் செயலாளர் பதவியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிக்கு சம்பளம் மாதம் ரூ.2.5 லட்சமாகும். ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ. 56,000 ஆகும். அடுத்ததாக NDA இந்திய ஆயுதப் படைகளின் கூட்டு பாதுகாப்பு சேவை பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகிய மூன்று சேவைகளுக்கான பயிற்சி அளிக்கிறது. பதவிகளை பொறுத்து இவர்களுக்கான சம்பளம் மாறுபடும். சராசரியாக இவர்களுக்கு மாதம் ரூ. 56,100 முதல் ரூ. 1,77, 500 வரை சம்பளம் வழங்கப்படும்.

மத்திய அரசின் CBIC சுங்க வாரியத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள்..!

இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பதவிகளுக்கு ரூ.83254 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் அதிகாரிகளுக்கு அகவிலைப்படி, உள்ளூர் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு, குடும்ப கொடுப்பனவு போன்ற சலுகைகளும் இடம் பெறும். இந்திய வனசேவை பிரிவில் அதிகாரிகளுக்கு கிரேடு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அதன்படி சராசரியாக மாதம் ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். மத்திய அரசு மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு சராசரியாக ரூ. 1,95,835 வரை வருமானம் கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!