இந்திய மக்களுக்கு இனி இதுவும் இலவசம்.. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – சூப்பர் திட்டம் அறிமுகம்!!

0
இந்திய மக்களுக்கு இனி இதுவும் இலவசம்.. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு - சூப்பர் திட்டம் அறிமுகம்!!
இந்திய மக்களுக்கு இனி இதுவும் இலவசம்.. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு - சூப்பர் திட்டம் அறிமுகம்!!
இந்திய மக்களுக்கு இனி இதுவும் இலவசம்.. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – சூப்பர் திட்டம் அறிமுகம்!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இலவசமாக தொலைக்காட்சி பார்க்கும் வசதியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இலவச டிஷ் டிவி

மத்திய அரசு கொரோனா கால கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது போன்ற பல வகையான திட்டங்கள் அவ்வவ்போது அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், எல்லை மற்றும் பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்கள் இனி இலவசமாக டிவி பார்க்க வசதியாக இலவச டிஷ் வழங்கப்படும் என அமைசச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்.. தேர்வு விதிகளில் முக்கிய மாற்றம்.. இனி Negative Mark இல்லை – JAIIB, CAIIB தேர்வர்கள் கவனத்திற்கு!

அதன்படி பழங்குடியின பகுதிகளில் இருக்கும் சுமார் 7 லட்சம் பேருக்கு இலவச டிஷ்கள் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் இருக்கும் பழைய ஸ்டுடியோ உபகரணங்கள், OB வேன் ஆகியவற்றை புதிதாக மாற்றியமைக்க இருப்பதாகவும் திட்டமிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தூர்தர்ஷனின் வீடியோ தரத்தை மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், பழைய டிரான்ஸ்மிட்டர்களை மாற்றி புதிய எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்களை நிறுவுவதாகவும் மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தால் நாடு முழுவதும் தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதனால் இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!