மத்திய அரசு வழங்கும் இலவச சிலிண்டர் பெறுவது எப்படி? உஜ்வாலா திட்ட இணைப்பு!
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்காக, பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப முறை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இலவச சிலிண்டர்
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாடும் குடும்ப பெண்களுக்காக சமையல் சிலிண்டர் இணைப்பு திட்டமானது உத்திர பிரதேசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டமானது மாநிலங்கள் தோறும் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ என்ற பெயரின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
கோவை பள்ளிகளில் ஜூன் 28 முதல் மாணவர் சேர்க்கை? கல்வித்துறை திட்டம்!
இதன் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வாங்குபவர்கள், இதற்கு முன் சிலிண்டர் இணைப்புகளை பெற்றிருக்க கூடாது. மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர் கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். இந்த சிலிண்டர் இணைப்பு, குடும்பத்தில் உள்ள பெண்ணின் பெயரில் வழங்கப்படும். இதற்கு தேவைப்படும் ஆவணங்களாக, நகராட்சி தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவரிடம் பெற்ற வறுமைக்கோடு சான்றிதழ்.
ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஜாதிச் சான்றிதழ், முகவரி ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக்கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை தேவைப்படும். மேலும் இதற்கான விண்ணப்பப்படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
இந்த இலவச சமையல் சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் எண்ணுடன், மொபைல் எண் கட்டாயமாக பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் முதல் முறையாக சிலிண்டர் இணைப்பை பெறும்போது, அதற்கான தொகை அவரது வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும். அந்த பணத்தை பயன்படுத்தி மத்திய அரசின் இலவச சிலிண்டர் இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ் மாதத்துக்கு ஒரு இலவச சிலிண்டர் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.