12ம் வகுப்பு படித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.63,000 ஊதியம்! முழு விவரம் இதோ!

0
12ம் வகுப்பு படித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாதம் ரூ.63,000 ஊதியம்! முழு விவரம் இதோ!
12ம் வகுப்பு படித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாதம் ரூ.63,000 ஊதியம்! முழு விவரம் இதோ!
12ம் வகுப்பு படித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.63,000 ஊதியம்! முழு விவரம் இதோ!

மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை சாலை கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. பணியிடம் குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு துறைகள் வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புமாறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எல்லை சாலை கழகத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை சாலை கழகத்தில் மொத்தம் 876 பணியிடங்கள் உள்ளதாகவும் 18 முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவில் 377 மல்டி ஸ்கில்ட் வொர்க்கர் ஆகிய பதவிகளில் உள்ள 499 பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக ஸ்டோர் கீப்பர் பணிக்கு 18 முதல் 27 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் பட்டியலினத்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

அதாவது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயதும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் சலுகைகள் உண்டு. ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவினருக்கு குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை கிடைக்கும், அதே போல மல்டி ஸ்கில்ட் வொர்க்கர் பிரிவில் பணியில் ரூ.18 ஆயிரமும், அதிகபட்சம் ரூ.56,900ம் மாதம் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பங்களை www.bro.gov.in இணையதளத்தில் பதிவிறக்கி பூர்த்தி செய்து Commandant GREF Centre, Dighi camp, Pune – 411 015 என்ற முகவரிக்கு தபாலில் ஜூலை 11ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here