மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என எழுந்த கோரிக்கைகளை அடுத்து, மத்திய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வூதிய திட்டம்

தற்போது அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும், தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) எனப்படும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2004 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய பொறுப்புகளிலிருந்து அரசாங்கம் விடுபடுவதற்கான ஒரு வழியாக தொடங்கப்பட்டது. இப்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை (OPS ) ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஜீ தமிழ் “சத்யா” சீரியல் ரவுடி பேபி ஆயிஷாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அந்த வகையில் பல்வேறு அரசுத் துறைகளின் ஒருங்கிணைந்த ஊழியர்கள் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோத்ரா உட்பட குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் 15 நிமிடங்களுக்கு முன்னதாக பள்ளிக்கு வந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றக் கோரி பதாகைகளை ஏந்தியபடி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தேசிய ஆலோசகரும், NOPRUF (National Old Pension Restoration United Front) அமைப்பின் குஜராத் பொறுப்பாளருமான ராகேஷ் கந்தாரியா கூறுகையில், ‘அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநிலம் அல்லது மாநில ஒருங்கிணைந்த நிதியிலிருந்து வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மாநில பட்டியலில் 42 வது இடத்தில் உள்ளன. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது மாநிலத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநில அரசு ஓய்வூதியம் குறித்து சுதந்திரமான முடிவை எடுக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இளைய தளபதி விஜயின் பீஸ்ட் பட ட்ரைலர் லீக் ஆனதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில், 2022-23 நிதியாண்டின் இறுதியில் அரசாங்கம், ஊழியர்களின் சம்பளத்திற்காக 38,020 கோடி ரூபாயையும், ஓய்வூதியத்திற்காக 20,073 கோடி ரூபாயையும் செலவிடும் என்றும் அரசின் சம்பள செலவு அதிகரித்து வருவதாகவும், அதற்கு எதிராக ஓய்வூதியச் செலவு குறைந்து வருவதாகவும் நிதித் துறையின் அதிகாரப்பூர்வ ஆவணம் தெரிவிக்கிறது. ஆனால் இம்மாநிலத்தில்ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த சரிவின் தாக்கமும் அதிகரிக்கிறது குறிபிடத்தக்கது.

இது தொடர்பாக ராகேஷ் கந்தாரியா கூறும் போது, ‘என்பிஎஸ்க்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, என்பிஎஸ் கணக்கில் இதுவரை டெபாசிட் செய்யப்பட்டுள்ள அதன் பொருந்திய பங்களிப்பின் தொகையையும், பங்குச் சந்தை அடிப்படையிலான திட்டத்தில் இருந்து ஊழியர்களின் பங்கையும் மீட்டெடுக்க அரசாங்கத்திற்கு உதவும். இதனால், தற்போது மாநில பட்ஜெட்டில் எந்தச் சுமையும் இல்லை என்பதுடன் மாதாந்திர பங்களிப்புத் தொகையும் சேமிக்கப்படும்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!