மத்திய அரசின் Combined Graduate Level தேர்வு – செப். 21 இலவச பயிற்சி வகுப்பு!

0
மத்திய அரசின் Combined Graduate Level தேர்வு - செப். 21 இலவச பயிற்சி வகுப்பு!
மத்திய அரசின் Combined Graduate Level தேர்வு - செப். 21 இலவச பயிற்சி வகுப்பு!
மத்திய அரசின் Combined Graduate Level தேர்வு – செப். 21 இலவச பயிற்சி வகுப்பு!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக Combined Graduate Level இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன

இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பல போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் பல போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி வகுப்புகள் நடத்த அனுமதி – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

இந்நிலையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் Combined Graduate Level குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. அதனை தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் Combined Graduate Level தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப்.21 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த தேர்விற்கான கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்விற்கு General Intelligence and Reasoning, General Awareness, Numerical Aptitude, English Comprehension போன்றவை பாடத்திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பாடத்திட்டங்களுக்கான வகுப்புகளும், வாரந்தோறும் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் 9597557913 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப்பில் தங்களது பெயர், கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here