இந்திய ரயில்வே துறையில் 5ஜி சேவை – மத்திய அரசு ஒப்புதல்!!

0
இந்திய ரயில்வே துறையில் 5ஜி சேவை - மத்திய அரசு ஒப்புதல்!!
இந்திய ரயில்வே துறையில் 5ஜி சேவை - மத்திய அரசு ஒப்புதல்!!
இந்திய ரயில்வே துறையில் 5ஜி சேவை – மத்திய அரசு ஒப்புதல்!!

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ரயில்வே துறையில் 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை அறிவிப்பு:

ரயில்வே துறை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் 16 இலட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே ரயில் நிலையங்கள், ரயில் சேவை, மக்களின் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வது முக்கியமான ஒன்றாக உள்ளது. இதற்காக 5ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலை புதிய உச்சம் – ஓபிஎஸ் கண்டனம்!!

ஏற்கனவே பல ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை பொருத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் முடிவில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, ரயில்வே துறையில் 5ஜி சேவை தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி இணையதள சேவை மூலமாக ரயில் ஓட்டுனர்கள் மற்றும் காவலர்களுக்கு இடையே அதிவேக தகவல் தொடர்பை உறுதி செய்ய முடியும்.

TN Job “FB  Group” Join Now

இதன் மூலம் ரயில்வே துறைகளில் பாதுகாப்பு மேம்படுகிறது. மேலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரயில் மோதல் தவிர்ப்பு முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் விபத்துகள் தவிர்க்கலாம் என்பதால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரூ.25000 கோடி மதிப்பிலான திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!