92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதாா் எண்ணுடன் இணைப்பு – மத்திய அரசு தகவல்!

0
92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதாா் எண்ணுடன் இணைப்பு - மத்திய அரசு தகவல்!
92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதாா் எண்ணுடன் இணைப்பு - மத்திய அரசு தகவல்!
92.8 சதவீத ரேஷன் அட்டைகள், ஆதாா் எண்ணுடன் இணைப்பு – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் இதுவரை 92.8 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்து உள்ளார்.

ஆதார் – ரேஷன் இணைப்பு:

இந்தியாவில் அரசு வழங்கும் குறைந்த விலை அத்தியாவசிய பொருட்களை பெற, அனைத்து மாநில அரசுகளும் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்குகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் மலிவான விலையில் உணவு பொருட்களை பெற்று பயனடைகின்றனர். தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் ஊரடங்கு காலத்தில் பயன் பெற்றனர். மத்திய அரசு நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தொலைதூர கல்வியில் PG பட்டம் பெற்றால் பதவி உயர்வு இல்லை!

ரேஷன் கார்டை தொடர்ந்து ஆதார் கார்டும் முக்கிய ஆவணமாக உள்ளது. மொபைல் எண், பான் எண் போன்றவற்றை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் நாட்டில் 5.38 லட்சம் ரேஷன் கடைகள் செயல்பாட்டில் உள்ளது. இந்த ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆதாருடன் ரேஷன் கார்டுகளை இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி இந்தியாவில் இதுவரை 92.8 சதவீத ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் உள்ள 4.98 லட்சம் ரேஷன் கடைகளில் 92.7 சதவீதம் மின்னணு விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகள் உள்ளதாகவும் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here