அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலி அறிமுகம்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் செயலி அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் செயலி அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலி அறிமுகம்!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டின் கீழ் உருவாக்கப்பட்ட மேரா ரேஷன் செயலியில் இருந்து அந்த மக்கள் அதிக உதவியை பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

மேரா ரேஷன் ஆப்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களையும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இணைத்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தனது மாதாந்திர ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட நபர் மட்டுமே பயோமெட்ரிக் செயல்முறைக்கு செல்ல வேண்டும். இந்த திட்டத்தின் பகுதியாக மத்திய அரசு புதிய மேரா ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தியது. தங்கள் வேலையின் காரணமாக அடிக்கடி நகரம் அல்லது மாநிலத்தை மாற்றுபவர்கள் மேரா ரேஷன் செயலியின் மூலம் அதிக உதவியை பெற முடியும்.

பயன்பாட்டின் அம்சங்கள்:

  • மேரா ரேஷன் மொபைல் ஆப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் உள்ளது.
  • இந்த செயலியின் மூலம் உங்களுக்கு கோதுமை மற்றும் அரிசி எவ்வளவு வழங்கப்படுகிறது, அதன் விலை என்ன, எவ்வளவு பெறப்பட்டது, இன்னும் எவ்வளவு பெற வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • ரேஷன் கார்டில் எவ்வளவு வினியோகம் செய்யப்பட்டுள்ளது, வீட்டைச் சுற்றி எத்தனை ரேஷன் டீலர்கள் உள்ளனர், இவை அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!

  • உங்கள் வீட்டின் அருகில் உள்ள டீலரை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • டீலரின் உரிம எண் மற்றும் பெயர், முகவரி அனைத்தையும் காணலாம்.
  • ரேஷன் கார்டுடன் ஆதார் இணைப்பு உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • நாடு முழுவதும் நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கு அருகிலுள்ள டீலர்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும். இந்த முழு அமைப்பும் Google Maps உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்யும் முறை:

  • முதலில் இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘மேரா ரேஷன்’ என்று டைப் செய்து தேட வேண்டும்.
  • ஒருமுறை தேடிய பிறகு இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • மொபைல் செயலியில் பதிவு செய்ய விருப்பம் உள்ளது. இதற்கு உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 20% வரை சம்பள உயர்வு! சூப்பர் அறிவிப்பு!

  • நீங்கள் எண்ணை உள்ளிட்டவுடன், உங்கள் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கே காண்பிக்கப்படும்.
  • ரேஷன் கார்டுடன் தொடர்புடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இங்கே காணலாம், அத்துடன் ஆதார் எண்ணும் தெரிவிக்கப்படும்.
  • மொபைல் செயலியில் உள்ள தகுதி விருப்பத்தைத் தட்டும்போது, ரேஷன் கார்டு எண் குறித்து கேட்கப்படும். எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்கள் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் உள்ளதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!