சமையல் எண்ணெய் விலை 20 சதவீதம் குறைப்பு? மத்திய அரசு தகவல்!

0
சமையல் எண்ணெய் விலை 20 சதவீதம் குறைப்பு? மத்திய அரசு தகவல்!
சமையல் எண்ணெய் விலை 20 சதவீதம் குறைப்பு? மத்திய அரசு தகவல்!
சமையல் எண்ணெய் விலை 20 சதவீதம் குறைப்பு? மத்திய அரசு தகவல்!

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை 20 சதவிகிதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் விலை:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சமையல் எண்ணெய்களின் விலை குறைய தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்திப்பு!!

சமையல் எண்ணெய் விலைகள், சர்வதேச விலைகள், உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு சிக்கலான விஷயங்களை சார்ந்துள்ளன. உள்நாட்டு நுகர்வு மற்றும் உற்பத்திக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருந்த காரணத்தால், குறிப்பிட்ட அளவு சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யவேண்டி இருந்தது. இதனால் இதற்கு தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசின் நடவடிக்கையின் படி, நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தகவலின் படி, கடந்த ஒரு மாத காலமாக சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்து வருகின்றன. மும்பையில் எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு மே 7 அன்று ஒரு கிலோ ரூ.142 ஆக இருந்த பாமாயிலின் விலை தற்போது ரூ.115 ஆக 19 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 5 அன்று ஒரு கிலோ ரூ.188 ஆக இருந்த சூரியகாந்தி எண்ணெயின் விலை தற்போது ரூ.157 ஆக 16 சதவீதம் குறைந்துள்ளது.
  • 2021 மே 20 அன்று ஒரு கிலோ ரூ162 ஆக இருந்த சோயா எண்ணெயின் விலை தற்போது ரூ.138 ஆக 15 சதவீதம் குறைந்துள்ளது.
  • 2021 மே 16 அன்று ஒரு கிலோ ரூ.175 ஆக இருந்த கடுகு எண்ணெயின் விலை தற்போது ரூ.157 ஆக சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது.
  • 2021 மே 14 அன்று ஒரு கிலோ ரூ.190 ஆக இருந்த கடலை எண்ணெயின் விலை தற்போது ரூ.174 ஆக 8 சதவீதம் குறைந்துள்ளது.
  • 2021 மே 2 அன்று ஒரு கிலோ ரூ.154 ஆக இருந்த வனஸ்பதியின் விலை தற்போது ரூ.141 ஆக 8 சதவீதம் குறைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!