மத்திய அரசு சார்பில் ரூ.36000 கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
மத்திய அரசு சார்பில் ரூ.36000 கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசு சார்பில் ரூ.36000 கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசு சார்பில் ரூ.36000 கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் முடிவடைவதற்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

உதவித்தொகை:

இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய மாநில அரசுகள் கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் பிற பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது அவர்களின் உயர்கல்வி வரை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் இவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

LPG காஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!

இந்த நிலையில் மேற்கண்ட மாணவர்களை தொடர்ந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 30,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையானது, தொழில் நுட்பம் மற்றும் தொழில் முறை சார்ந்த முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் மாணவிகளுக்கு சலுகை அளிக்கும் வகையில் 36,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வேலை – பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

தற்போது இத்திட்டத்தின் கீழ் 2021 – 2022ம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் 60% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் www.ksb.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணத்தை ஏப்ரல் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!