மாணவர்களின் பொதுத்தேர்வு பயத்தை போக்க இலவச ஆலோசனை – மத்திய கல்வி அமைச்சகம்!!

0
மாணவர்களின் பொதுத்தேர்வு பயத்தை போக்க இலவச ஆலோசனை - மத்திய கல்வி அமைச்சகம்!!
மாணவர்களின் பொதுத்தேர்வு பயத்தை போக்க இலவச ஆலோசனை - மத்திய கல்வி அமைச்சகம்!!
மாணவர்களின் பொதுத்தேர்வு பயத்தை போக்க இலவச ஆலோசனை – மத்திய கல்வி அமைச்சகம்!!

கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசே முடிவுகளை எடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கலாம் என்ற குழப்பம் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் மனநிலைமையை கருத்தில் கொண்டு உளவியல் ஆலோசனை வழங்க
இலவச எண்ணை மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

இலவச எண் அறிவிப்பு:

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். தற்போது தான் பல தளர்வுகளுக்கு பின் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படாததால் அவர்கள் வீட்டிலேயே இருந்து பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கும் அரசுகள் எந்த மாதத்தில் தொடங்கப்படும்? எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அறிவிப்பும் வெளியிடவில்லை.

இனி எளிய முறையில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம் – ஐஆர்சிடிசி இணையதளம் அப்டேட்!!

இதற்கிடையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால் மாணவர்கள் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து டிசம்பர் 4ஆம் தேதி மாணவர்களுடனும், 22ஆம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடினார். அதன்பின் தேர்வு கட்டாயம் எழுத்து முறையில் நடைபெறும் ஆனால் அது பிப்ரவரிக்கு பிறகே கொரோனா பரவல் பொறுத்து தாமதமாகலாம் எனத் தெரிவித்தனர்.

மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு?? ஆளுநரிடம் முறையீடு!!

தற்போது இதுகுறித்து மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ”மாணவர்களே நீங்கள் கவலையிலோ, பயத்திலோ, ஆதரவற்ற நிலையிலோ உள்ளீர்களா? நீங்கள் எதற்கும் வருத்தப்பட தேவையில்லை. உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம், உங்களின் கருத்துக்களை தெரிவிக்க 84484 40632 என்ற தேசிய இலவச தொலைபேசி எண்ணை அழைத்து எங்களின் ஆலோசகரிடம் பேசுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!