சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள Counselor FLCC, Attender மற்றும் Director RSETI பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Bank of India (CBI)
பணியின் பெயர் Counselor FLCC, Attender, Director RSETI
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள Counselor FLCC, Attender மற்றும் Director RSETI ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Counselor, Attender, Director கல்வி தகுதி:
  • Counselor FLCC, Director RSETI பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UCG அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • Attender பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Counselor, Attender, Director முன்னனுபவம்:

Counselor FLCC, Director RSETI பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Branch Manager அல்லது Agriculture Finance Officer பதவிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Counselor, Attender, Director வயது வரம்பு:
  • Counselor FLCC, Director RSETI பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Attender பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
CBI ஊதியம்:
  • Counselor FLCC பணிக்கு ரூ.15,000/- என்றும்,
  • Director RSETI பணிக்கு ரூ. 25,000/- என்றும்,
  • Attender பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

CBI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

CBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (12.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here