TNPSC இந்திய அரசியலமைப்பு – மத்திய நிர்வாகத் துறை

0

மத்திய நிர்வாகத் துறை

குடியரசுத் தலைவர்

சரத்து 52-முதல் 78 வரை நிர்வாகத்தை பற்றி விவரிக்கிறது.

  • மத்திய நிர்வாக அமைப்பானது குடியரசுத்தலைவர், குடியரசுத்துணைத்தலைவர், பிரதமமந்திரி, அமைச்சரவை குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோர்களை உள்ளடக்கியுள்ளது.
  • குடியரசுத்தலைவர் இந்திய அரசின் தலைவர் ஆவார். அவர் நாட்டின் முதல் குடிமகனாவார். மேலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னமாக திகழ்கிறார்.
  • குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தல் (சரத்து 55)
  • குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை ஆனால் தேர்வாளர் குழுவின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்வாளர் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள்:
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
  • அனைத்து மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
  • சட்டமன்றங்கள் உள்ள டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
  • அரசியலமைப்பின்படி குடியரசுத்தலைவர் தேர்தலில் வௌ;வேறு மாநிலங்களுக்கும் அதனுடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் நாடு முழுமைக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.
  • இதனை பூர்த்தி செய்ய மொத்த வாக்குகளை கணக்கிட மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பின் வரும் முறைகளில் அறியலாம்

ஒரு MLA- ன் வாக்கு மதிப்பு

ஸ்ரீ மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை ஃ மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த MLA x 1 / 1000

ஒரு MP யின் வாக்கு மதிப்பு

அனைத்து மாநில MLA க்களின் மொத்த ஓட்டு மதிப்பு ஃ பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை

குடியரசுத்தலைவரின் தேர்தலானது “விகிதாச்சார பிரதிநிதித்துவ” முறையில் ஒற்றை மாற்று வாக்களிப்பில் மறைமுக தேர்தலாக நடைபெறும். இம்முறையில் வெற்றி பெறும் வேட்பாளர் முழுமையான பெரும்பான்மை பெற்று இருக்க வேண்டும்.

தகுதிகள்

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 35வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.
  • மக்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.
  • மத்திய, மாநில அரசுகளிலோ, அல்;லது உள்ளுர் அமைப்புகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ ஆதாயம் பெறும் பதவிகளை வகிக்கக்கூடாது.
  • பதவிப் பிரமான உறுதி மொழி (சரத்து – 60)
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவர் பதவியில் இல்லாதபோது வயதில் மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் மற்றும் உறுதி மொழியை செய்துவைப்பார்.
  • குடியரசுத்தலைவர் அலுவலக பதவிகாலம்
  • குடியரசுத் தலைவர் பதவிக்காலம் அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை இருக்கும்.
  • குடியரசுத் தலைவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் பதவிவிலகலாம்.
  • தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் துணைத் தலைவரிடம் வழங்க வேண்டும்.
  • அவர் பதவிக்காலம் முடியும் முன்பே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும். இரண்டாம் முறை போட்டியிட அனுமதியுண்டு, எத்தனைமுறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம்.
  • குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் (சரத்து 61)
  • அரசியலமைப்பை மீறி செயல்பட்டதற்காக குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யலாம்.
  • பதவி நீக்க செயல்பாடுகளை பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் துவங்கலாம். அந்த அவையில் ¼பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து அந்தந்த அவை தலைவர்களிடம் வழங்கவேண்டும். மேலும் குடியரசுத்தலைவருக்கு 14 நாளுக்கு முன்பாக பதவி நீக்கம் தொடர்பான அறிக்கை அளிக்க அனுப்ப வேண்டும்.
  • பதவி நீக்க மசோதாவிற்கு மொத்த உறுப்பினர்களில் 2ஃ3 பங்கு ஆதரவாக வாக்களித்தால் அந்த அவையில் இருந்து மற்றொரு அவைக்கு மசோதா இடம் பெறும் அங்கும் சிறப்பு பெரும்பான்மையில் வெற்றிபெற்றால் குடியரசுத் தலைவர் பதவி விலகவேண்டும்.
  • குடியரசுத் தலைவரை பதவி நீக்குவதில் பாராளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள மொத்த உறுப்பினர்கள் (நியமன உறுப்பினர்களும் அடங்குவர்) பங்கு கொள்வர். இரு அவைகளின் நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறவில்லை என்றாலும் அவரை பதவி நீக்குவதில் இடம்பெறுகின்றனர்.
  • இது வரை எந்த ஒரு குடியரசுத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட வில்லை.

குடியரசுத்தலைவர் அலுவலகம் வெற்றிடமாவது

  • பதவிக்காலம் முடிவுறுதல்.
  • பதவி விலகுதல்.
  • பதவி நீக்கம் மூலம்.
  • அவரின் இறப்பு

இதர இனங்கள் உதாரணமாக தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அறிவித்தல்; குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக உருவாகும் அனைத்து சர்ச்சைகளுக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானது.

  • குடியரசுத்தலைவர் அலுவலகம் குடியரசுத் தலைவரின் பதவி விலகல், பதவி நீக்கம், இறப்பு அல்லது இதர காரணங்களால் வெற்றிடம் ஏற்பட்டால் ஏற்பட்ட நாளிலிருந்து 6-மாத காலத்திற்குள் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை குடியரசுத் துணைத்தலைவர் குடியரசுத் தலைவராக பதவி வகிப்பார்.
  • பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஏதேனும் இயலாத காரணத்தால் தற்சமயம் விடுப்பில் இருந்து மீண்டும் சில காலம் கழித்து பதவி ஏற்கும் வரை குடியரசுத்துணைத் தலைவர் அப்பதவியை வகிப்பார்.
  • ஒருவேளை குடியரசுத் துணைத்தலைவர் பதவியும் காலியாக இருந்தால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவராக பதவி வகிப்பார். (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியும் காலியாக இருந்தால் வயதில் மூத்த உச்சநீதி மன்ற நீதிபதி குடியரசுத்தலைவராக பதவி ஏற்பார்)

குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள்

  • நிர்வாக அதிகாரங்கள்
  • சட்டமன்ற அதிகாரங்கள்
  • நிதி அதிகாரங்கள்
  • நீதி அதிகாரங்கள்
  • தூது அதிகாரங்கள்
  • இராணுவ அதிகாரங்கள்
  • நெருக்கடி நிலை அதிகாரங்கள்

நிர்வாக அதிகாரம்

  • இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரத்தின் தலைவராக இந்திய குடியரசுத் தலைவர் திகழ்கிறார்.
  • இந்திய அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்படுகிறது.
  • பிரதம அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களையும் நியமிக்கிறார்.
  • இந்திய தலைமை வழக்கறிஞரையும் (யுவவழசலெ புநநெசயட ழக ஐனெயை) இவரே நியமிக்கிறார்.

மேலும் ஒரு சில உயர்மட்ட அலுவலர்களை நியமிக்கிறார் அவர்கள்:

  • தலைமை கணக்குத் தணிக்கையாளர்
  • தலைமைத் தேர்தல் அதிகாரி
  • மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவர் (ருPளுஊ)
  • மாநில ஆளுநர்கள்
  • நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

சட்டமன்ற அதிகாரங்கள்

  • குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆவார்.
  • பாராளுமன்றத்தின் கூட்டத்தை கூட்டவோ அல்லது ஒத்தி வைக்கவோ முடியும் மற்றும் மக்களவையைக் கலைக்கும் அதிகாரமும் பெற்றுள்ளார்.
  • பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்ட அதிகாரம் பெற்றுள்ளார்.
  • பொதுத்தேர்தல் நடந்து அமையும் புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் மற்றும் ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றுவார்.
  • மாநிலங்களவையில் இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக பணிகளில் நடைமுறை அனுபவம் பெற்ற 12 நபர்களை சரத்து 80 (3) ன் படியும் மக்களவையில் 2- ஆங்கில – இந்திய பிரதிநிதிகளை சரத்து 331-ன் படியும் நியமனம் செய்வார்.
  • குடியரசுத்தலைவரின் முன் பரிந்துரை அல்லது அனுமதியுடன் சில வகை மசோதாக்களை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும். உதாரணமாக ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்கள் தொடர்பான மசோதாக்கள்.
  • பாராளுமன்றம் கூடாத போது நாட்டிற்கு தேவையான அவசர சட்டங்களை ஷரத்து 123-ன் படி குடியரசுத்தலைவர் இயற்றலாம்.
  • நிதி அதிகாரம்
  • பணமசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் முன்பாக குடியரசுத் தலைவரின் முன் அனுமதியை பெறவேண்டும். (ஷரத்து 110)
  • ஆண்டு நிதிநிலை அறிக்கையை (மத்திய பட்ஜெட்) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு காரணமாக இருக்கிறார். (ஷரத்து 112)
  • குடியரசுத்தலைவரின் பரிந்துரை பெறாமல் மானியக் கோரிக்கையை நிறை வேற்ற முடியாது.
  • நாட்டில் ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தேவைப்படும் நிதியை (ஊழவெiபெநnஉல கரனெ) குடியரசுத்தலைவர் முன்பணமாக பெறலாம்.
  • ஒவ்வொரு 5-ஆண்டுக்கும் ஒரு முறை நிதி ஆணையத்தை நிறுவி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வை அளிப்பார்.
  • நீதி அதிகாரம்
  • உச்ச மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிப்பார்.
  • சட்டம் அல்லது உண்மை விதி தொடர்பாக எழும் விளக்கங்களுக்கும் உச்சநீதி மன்றம் சரத்து 143-படி தகுந்த விளக்கத்தை வழங்கவேண்டும். அவ்வாறு உச்ச நீதிமன்றம் தரும் விளக்கத்தை கட்டாயம் குடியரசுத்தலைவர் ஏற்கவேண்டிய அவசியமில்லை.
  • நீதி மன்றத் தீர்வு வாயிலாக குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குதல் மற்றும் அவர்களின் தண்டனையை குறைத்தல் போன்றவற்றை செய்ய இயலும்.

தூது அதிகாரம்

  • இந்தியா தொடர்பாக மேற்கொள்ளப்படும் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் ஆகிய அனைத்தும் குடியரசுத் தலைவர் பெயராலேயே மேற்கொள்ளப்படும். எனினும் இவை பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.
  • சர்வதேச மாநாடுகளுக்கு பிரதிநிதிகளை இந்தியா சார்பாக அனுப்புதல் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு தூதுவர்களையும், உயர்மட்ட கமிஷனர்களையும் நியமித்தல் மற்றும் திரும்பப் பெறுதல்.

ராணுவ அதிகாரம்

  • குடியரசுத் தலைவர் நமது பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதியாவார்.
  • இவர் தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல்படையின் தலைமைத் தளபதிகளை நியமிக்கிறார்.
  • மேலும் யுத்தம் அல்லது சமாதானம் போன்ற முடிவுகளை மேற்கொள்கிறார். எனினும் இந்த முடிவுகளுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறவேண்டும்.

நெருக்கடி நிலை அதிகாரம்

  • தேசிய நெருக்கடி நிலை சரத்து 352
  • குடியரசுத்தலைவர் ஆட்சி சரத்து 356
  • நிதி நிலை நெருக்கடி சரத்து 360

குடியரசுத்தலைவரின் ஒப்புதல் மற்றும் ரத்து அதிகாரம்

  • பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அம்மசோதா சட்டமாகும்.
  • ஒரு மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் அவர் மூன்று மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். (ஷரத் 111) அவைகளாவன
  • குடியரசுத்தலைவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம்.
  • குடியரசுத்தலைவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்கலாம்
  • குடியரசுத்தலைவர் அந்த மசோதாவை மறுபரிசீலனைக்கு பாராளுமன்றத்திற்கு அனுப்பலாம் (பண மசோதாவை தவிர்த்து)
  • எனினும் இந்த மசோதா பாராளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் தெரிவித்த திருத்தங்களை ஏற்றோ அல்லது ஏற்காமலோ மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்பினால் குடியரசுத்தலைவர் கட்டாயம் கையொப்பம் இடவேண்டும்.

மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PDF Download 

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!