7வது ஊதியக்குழு – மத்திய அரசு ஊழியர்களின் DA, DR வழங்குவது குறித்து இன்று முடிவு!

0
7வது ஊதியக்குழு - மத்திய அரசு ஊழியர்களின் DA, DR வழங்குவது குறித்து இன்று முடிவு!
7வது ஊதியக்குழு - மத்திய அரசு ஊழியர்களின் DA, DR வழங்குவது குறித்து இன்று முடிவு!
7வது ஊதியக்குழு – மத்திய அரசு ஊழியர்களின் DA, DR வழங்குவது குறித்து இன்று முடிவு!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியபடி (DR) வழங்குவது குறித்து இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அமைச்சரவை கூட்டம்:

இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் DA, DR வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இடையே நடந்த கூட்டத்தில், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் DA, DR சலுகைகள் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பான இறுதி முடிவு மத்திய அமைச்சரவையால் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2021 நிலுவைத் தொகை உட்பட, 2021 செப்டம்பரில் DA, DRன் நிலுவையில் உள்ள மூன்று தவணைகள் வழங்கப்படும் என்று அமைச்சரவை செயலாளர் ஒப்புக் கொண்டதாக பொதுச் செயலாளர் மிஸ்ரா அவர்கள் தெரிவித்து இருந்தார். மத்திய அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பணிபுரிந்தனர், இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. எனவே அரசாங்கம் அவர்களின் நியாயமான பலன்களை வழங்க வேண்டும் என அவர் கோரி உள்ளார்.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு – முதல்வர் உத்தரவு!

இதற்கிடையில், டிஏ மற்றும் டிஆர் குறித்து இறுதி முடிவை விரைவாக எடுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், ஆயுதப்படை ஊழியர்கள் உட்பட, தங்களுக்கு உரிய டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆரின் கூடுதல் தவணைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here