மக்கள் தொகை கணக்கெடுப்பால் கொரோனா ஏற்பட வாய்ப்பு..!

0
மக்கள் தொகை கணக்கெடுப்பால் கொரோனா ஏற்பட வாய்ப்பு..!
மக்கள் தொகை கணக்கெடுப்பால் கொரோனா ஏற்பட வாய்ப்பு..!

மக்கள் தொகை கணக்கெடுப்பால் கொரோனா ஏற்பட வாய்ப்பு..!

நாட்டை அச்சுறுத்தும் கொரோனா,இந்த நேரத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதனால் கொரோனா தொற்றை ஏற்படுத்தும்.தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டங்களில் பல மாற்றங்களை மேற்கொண்ட மத்திய அரசு, அதை ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்த நிலையில், கொரோனா தொற்றுதல் காரணமாக சாத்தியம் ஆகாது என்ற நிலை வந்துள்ளது.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

இந்த சூழ்நிலையில் மாநில முதல்வர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சில அறிவுரைகள், கோரிக்கைகளை முன் வைத்து கடிதங்களை எழுத தொடங்கிவிட்டனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், கொரோனா தொற்று நம்மை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கடிதத்தில், “இந்த நேரத்தில் மக்கள் தொகை கணக்கீடு தொடர்பான பணிகளை தள்ளிப்  போடுவதுதான் சரி என படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகக் கணக்கெடுப்பை மேற்கொள்பவர்கள் தொடங்கி மக்கள் அனைவருக்குமே இப்போது கணக்கெடுப்பை நடத்துவது ஆபத்துதான் என நவீன் பட்நாயக் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்ட கேட்டபோது, அவர்கள் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. மவுனம் சாதித்தனர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் நிலையில் ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், “கணக்கெடுப்பு பணிகளில் தொடங்குவதில் சில காலதாமதம் ஏற்படலாம். அதே வேலையில் அதைச் செப்டம்பர் 30க்குள் முடிக்க பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்த சமயத்தில் தேசி மக்கள் தொகை கணக்கீட்டை வீடு வீடாகச் சென்று எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. இதை இப்போதைய நேரத்தில் செய்தால் அது வீட்டிலிருபவர்ககுக்கும், கணக்கெடுப்பை எடுப்பவருக்கும்  ஆபத்தாக மாறிவிடும்.இதனால் கணக்கெடுப்பை மேற்கொள்ள அதிக நபர்களை ஈடுபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அந்த சமயம் இப்போதைய நேரத்தில் பல மாநிலங்கள் கொரோனா பீதி காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இப்போது எடுக்கப்பட உள்ள கணக்கெடுப்பில் புதிதாகப் பல கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர் உள்ளிட்ட கேள்விகள் இடம் பிடித்துள்ளன. கேரளா இந்த முறையில் கணக்கெடுப்பை நடத்த முடியாது என அறிவித்துள்ள நிலையில் தெலங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த முறை கணக்கெடுப்பை நிலுவையில் வைத்துள்ளது.

சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல்

இதனால் மத்திய அரசு ஆதரவாளர்கள் இந்த கணக்கெடுப்பு குறித்துக் கூறுகையில், ” ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 30 வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் 45 நாட்கள் ஆட்களை பணியமர்த்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றே மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால் இதில் சிக்கல்கள் ஏற்படாது. மேலும் விரைவில் இந்தியாவிலிருந்து  கொரோனா ஒழிக்கப்படும்” எனக் கூறப்படுகின்றனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!