தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு – சிறப்பு குழு ஏற்பாடு!

0

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு – சிறப்பு குழு ஏற்பாடு!

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசியை விநியோகம் செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை வைத்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைக்கு இந்த குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டு இனி ரேஷன் கடைகளுக்கு தரமற்ற அரிசியை அனுப்பக் கூடாது எனவும் அதனை கண்காணிக்க குழு ஒன்றையும் நியமித்துள்ளார்.

ரேஷன் கடைகள்

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே 2.19 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலமாகவும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சமமாக போய் சேர வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் கைரேகை பதிவின் மூலமாக ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

மே மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – RBI அதிகாரப்பூர்வ அறிக்கை! பொதுமக்கள் கவனத்திற்கு!

இது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் நலனுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு எந்த மாநிலத்தில் குடி சென்றாலும் அதே இடத்தில் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வப்போது ரேஷன் கடைகளில் கொடுக்கும் பொருட்கள் தரமற்றதாக இருக்கிறது என மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்நிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது ரேஷன் கடைகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் பொருட்கள் சுகாதார முறையில் இருக்கிறதா தரமான பொருட்களை தான் விநியோகம் செய்கிறார்களா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் கண்காணிப்பு குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் மக்களுக்கு கடந்த சில வாரங்களாக தரமற்ற அரிசியை பொது மக்களுக்கு விநியோகம் செய்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், செயலர்கள் என மொத்தமாக 27 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தரமற்ற அரிசியை ரேஷன் கடைகளுக்கு பொறுப்பு அதிகாரிகள் அனுப்பக் கூடாது எனவும், அதை மக்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வினியோகம் செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here