பிரபல சீரியல் நாயகனை கரம் பிடித்த செய்தி வாசிப்பாளர் கண்மணி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
பிரபல சீரியல் நாயகனை கரம் பிடித்த செய்தி வாசிப்பாளர் கண்மணி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
பிரபல சீரியல் நாயகனை கரம் பிடித்த செய்தி வாசிப்பாளர் கண்மணி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
பிரபல சீரியல் நாயகனை கரம் பிடித்த செய்தி வாசிப்பாளர் கண்மணி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணி மற்றும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகனான நவீனுக்கும் கடந்த ஏப்ரல் 15 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கண்மணி நிச்சயதார்த்தம்:

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக எக்கச்சக்க ரசிகர்களை சம்பாரித்தவர் தான் கண்மணி. இவர் செய்தி வாசிக்கும் விதத்தினை ரசிக்கவே பலரும் சன் தொலைக்காட்சியில் செய்தியினை தினமும் பார்க்க ஆரம்பித்தனர். கண்மணியை வைத்து பல மீம்கள் கூட சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வந்தன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே 4 லட்ச ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். அதாவது பல திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலை காப்பி அடிக்கும் மௌன ராகம் 2 – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சமீபத்தில் வெளியான வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்படங்களில் கூட செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஏகப்பட்ட பட வாய்ப்பையும் கைக்குள் வைத்திருக்கிறார். திரைப்பட வாய்ப்புகளையும் தாண்டி கண்மணி பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்வார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கண்மணி பட வாய்ப்புகளின் காரணமாக பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ளவில்லை. தற்போது கண்மணிக்கு இதயத்தை திருடாதே சீரியல் மூலமாக பிரபலமான நவீன் உடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

கோபியின் மீதி கொலை வெறியில் இருக்கும் பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

நவீனுக்கும் திரையுலகில் கண்மணியின் அளவுக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர்களின் நிச்சயதார்த்தம் ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதா அல்லது காதல் திருமணமா என ரசிகர்கள் கேட்டபடி இருக்கின்றனர். ஆனால், இவர்களின் திருமணம் உண்மையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதே. நவீன் குறித்து கண்மணியிடம் கேட்ட போது எனது அப்பாக்கு பிறகு நவீனுடன் தான் பாதுகாப்பாக உணருகிறேன் என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!