மாஸ்டர் செஃப் ஷோக்கு சிறப்பு விருந்தினராக வரும் பிரபல நடிகை – சேனலின் புது பிளான்!

0
மாஸ்டர் செஃப் ஷோக்கு சிறப்பு விருந்தினராக வரும் பிரபல நடிகை - சேனலின் புது பிளான்!
மாஸ்டர் செஃப் ஷோக்கு சிறப்பு விருந்தினராக வரும் பிரபல நடிகை - சேனலின் புது பிளான்!
மாஸ்டர் செஃப் ஷோக்கு சிறப்பு விருந்தினராக வரும் பிரபல நடிகை – சேனலின் புது பிளான்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்வதற்காக வரும் வாரம் பிரபல நடிகை ஒருவரை சிறப்பு விருந்தினராக களம் இறக்க இருக்கின்றனர்.

மாஸ்டர் செஃப்:

சர்வதேச அளவில் பிரபலமான சமையல் போட்டி மாஸ்டர் செஃப் ஆகும். உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்தியாவில் இதுவரை ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பாகியது. சமையலை தங்கள் வாழ்வாக கொண்டவர்கள் இந்த போட்டியில் ஒரு கலந்து கொள்ள மாட்டோமா என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி சமையலை முக்கியத்துவப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திட்டமிட்டபடி திறப்பு – அரசு அறிவிப்பு!

நிகழ்ச்சியை வெளித்திரையின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, உலகத் தரம் வாய்ந்த செஃப்களான ஆர்த்தி சம்பத், ஹரீஷ் ராவ், கௌசிக் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். இந்த ஷோவின் தெலுங்கு மொழியில் நடிகை தமன்னா தொகுப்பாளராக களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. பலதரப்பட்ட தரப்புகளில் இருந்தும் போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 4 முக்கிய மாவட்டங்களில் போட்டியாளர்கள் போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

மொத்தம் 12 போட்டியாளர்கள் உள்ள இந்த நிகழ்ச்சியில் இதுவரை 7 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ளது. இருப்பினும், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை இந்த ஷோ பெற தவறி விட்டது என்றே சொல்லலாம். காரணம் அநேகம் பேர் இந்த ஷோவை குக் வித் கோமாளி நிகழ்ச்சியுடன் இணைத்து ஒப்பீடு செய்து வருகின்றனர். இது தனி ரகம் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ரசிகர்களை அதிகரிக்கவும், பார்வையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் புதுமையை செய்ய வேண்டி இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இதனால் மாஸ்டர் செஃப் குழுவினர் வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளவர்களை ஷோவுக்கு அழைத்துவர முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நிக்கி கல்ராணி மாஸ்டர் செஃப் ஷோவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழுவினரின் இந்த செயலால் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி அதிகரிக்குமா, இல்லையா என்பதை அடுத்த வாரம் தான் தெரிந்து கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!