சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஹாப்பி!

0
சன் டிவி 'கண்ணான கண்ணே' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் ஹாப்பி!
சன் டிவி 'கண்ணான கண்ணே' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - ரசிகர்கள் ஹாப்பி!
சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஹாப்பி!

வெள்ளித்திரை நடிகர் சஞ்சீவின் மனைவியும் பிரபல சீரியல் நடிகையுமான ப்ரீத்தி சஞ்சீவ் அவர்கள் சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு என்ட்ரி கொடுத்து நல்ல ரோலில் நடித்து பல ரசிகர்களின் பார்வையை தனது நடிப்பின் பக்கம் திருப்பினார். அதன் பிறகு சிறிது காலம் பிரேக் எடுத்து கொண்டவர் மீண்டும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் :

வெள்ளித்திரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி, இவற்றில் நடிக்கும் நடிகை நடிகர்கள் ரீல் ஜோடிகளாக நடிப்பது மட்டமல்லாமல் காதலித்து நிஜ வாழ்க்கையிலும் இணைகின்றனர். அவ்விதமாக பிரபல நடிகர் சஞ்சீவ் அவர்கள் சினி துறையில் இருக்கும் ப்ரீத்தி அவர்களையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் ஒவ்வொரு ட்ராக்கில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தனர். சிறிது காலம் எங்க போனார்கள் என்று கேட்கும் அளவுக்கு இருவருமே சினி துறைக்கு பிரேக் எடுத்து நடிக்காமல் இருந்தனர்.

Exams Daily Mobile App Download

பிறகு திடீரென ஒருநாள் சின்னத்திரைக்கு நடிக்க வந்து ஷாக் கொடுத்தவர் தான் சஞ்சீவ். ஏனென்றால் சஞ்சீவ் வெள்ளித்திரையில் தனது நடிப்பால் பிரபலமானத்துக்கு சமமாக தளபதி விஜய் அவர்களின் நண்பர் என்ற பெருமையும் இருந்தது. இவர் சின்னத்திரைக்கு வந்தது ஒரு பக்கம் ஷாக் கொடுத்தாலும் அதே அளவுக்கு நல்ல வரவேற்பும் அவர் நடித்த திருமதி செல்வம் சீரியல் பெற்று கொடுத்தது. அதுபோல சஞ்சீவ் மனைவி ப்ரீத்திக்கும் மீடியா என்பது புதிதல்ல, ஏன்னா! அவர் பல ஷோக்களிலும், சீரியலிலும் முன்னதாகவே நடித்து இருக்கிறார். இருவருக்கும் லயா, ஆதவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

ப்ரீத்தி அவர்கள் பக்கா கிளாஸிக்கல் டான்ஸ்டர். இவர் கணவர்,பிள்ளைகள் என குடும்பத்தில் பிஸியானதால் சின்னத்திரைக்கு சிறிது பிரேக் எடுத்துக்கொண்டார் போல ரொம்ப காலம் மீடியா பக்கம் ஆளே காணாமல் இருந்தார். அதன் பின்பு சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ’கண்ணான கண்ணே’ சீரியலில் வாசுகி என்ற ரோலில் நடித்து மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்க தொடங்கிய நேரத்தில் மீண்டும் பிரேக் எடுத்து சீரியலில் வாசுகி ஊருக்கு செல்வது போல் அவருடய ரோல் மறைந்தது. அப்போது தான் சஞ்சீவுக்கு பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது.

மூர்த்தியிடம் கோவப்படும் கதிர், பிரியும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

அங்கு பிரீஸ் டாஸ்கில் சஞ்சீவை பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு ப்ரீத்தியும் அவர்களது குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். தற்போது அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு இவர் ஏன் அடிக்கடி பிரேக் எடுத்து மீடியாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் என்ற காரணம் இப்போதுதான் புரியவருகிறது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு வெயிட் அதிகமானதால் கடின உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை 1 வருடத்தில் குறைத்துவிட்டு எல்லாஅம்மா போன்று அவரது கடமைகளை செய்துவிட்டு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவ்வாறு அவரது குடும்ப பொறுப்புக்கு ரசிகர்களும் நல்ல விதமாக கமெண்ட் செய்து பாராட்டி வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here