காதலுக்கு மரியாதை, அலைபாயுதே புகழ் மலையாள நடிகை லலிதா மரணம் – பிரபலங்கள் இரங்கல்!

0
காதலுக்கு மரியாதை, அலைபாயுதே புகழ் மலையாள நடிகை லலிதா மரணம் - பிரபலங்கள் இரங்கல்!
காதலுக்கு மரியாதை, அலைபாயுதே புகழ் மலையாள நடிகை லலிதா மரணம் - பிரபலங்கள் இரங்கல்!
காதலுக்கு மரியாதை, அலைபாயுதே புகழ் மலையாள நடிகை லலிதா மரணம் – பிரபலங்கள் இரங்கல்!

500க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகை லலிதா, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மரண செய்தியை அறிந்த பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை லலிதா:

பல படங்களில் கதாநாயன், நாயகியை விட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றனர். அதுபோல தான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் புகழை சேர்த்தவர் நடிகை லலிதா. மலையாள உலகை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழ் மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு திறமை மூலம் பல விருதுகளையும் குவித்துள்ளார். நடிகை லலிதா மறைந்த பிரபல இயக்குனர் பரதனின் மனைவி ஆவார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு!

நடிகை லலிதா முதன்முதலில் 1969ம் ஆண்டு கே.எஸ் சேது மாதவன் இயக்கத்தில் வெளியான ‘கூட்டுக்குடும்பம்’ படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’, ‘மாமனிதன்’, ‘காற்று வெளியிடை’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் இவரின் நடிப்பு மிகவும் அதிக அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் மலையாளம் என்று மொத்தம் 550 படங்களில் நடித்துள்ளார் நடிகை லலிதா. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது 2 முறையும், கேரள அரசின் மாநில விருதுகளை 4 முறையும் பெற்றுள்ளார்.

மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு திடீர் விளக்கம்!

பினராயி விஜயன் கேரளாவின் முதல்வராக நியமிக்கப்பட்ட கடந்த 2016ம் ஆண்டு ‘கேரள சங்கீத நாடக அகாடமி’யின் தலைவராக லலிதா நியமிக்கப்பட்டார். கடந்த நவம்பர் மாதம் முதல் உடல் நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு சற்று உடல்நலம் தெரிய நிலையில், கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு தற்போது வயது 73 ஆகும். இந்நிலையில் நேற்று (பிப்.22) இரவு நடிகை லலிதா காலமானார். இந்த செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் லலிதாவின் இறுதிச்சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நடக்க உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!