சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த பிரியங்கா – குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்!

0
சன் டிவி 'ரோஜா' சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த பிரியங்கா - குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்!
சன் டிவி 'ரோஜா' சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த பிரியங்கா - குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்!
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த பிரியங்கா – குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்!

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் ரோஜாவாக நடித்து வரும் நடிகை பிரியங்கா தற்போது சீரியலில் இருந்து கிடைத்துள்ள சிறிய பிரேக்கை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை பிரியங்கா

தற்போது 1000வது எபிசோடை வெற்றிகரமாக கடந்திருக்கும் சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சினிமா பாணியில் கடத்தல், சேஸிங், துப்பாக்கி சண்டை, அமானுஷ்யம், காதல், ரகளை என பலவிதமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘ரோஜா’ சீரியல் எப்போதும் ரசிகர்களின் கவனம் பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் இந்த சீரியலில் தற்போது கூட ஜெயிலில் இருக்கும் அனுவை பேய் வேடமிட்டு ரோஜா மிரட்டுவது போல சில பரபரப்பான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

இந்நிலையில் ‘ரோஜா’ சீரியலில் ரோஜாவாக நடித்து வரும் நடிகை பிரியங்கா சீரியலில் இருந்து கிடைத்துள்ள இடைவேளையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். அதாவது பெங்களூருவை சொந்த ஊராக கொண்ட நடிகை பிரியங்கா, தமிழ் மொழியில் எடுக்கப்பட்டு வரும் ‘ரோஜா’ சீரியலில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இத்தொடரில் மிகவும் கியூட்டான, சுட்டிப் பெண்ணாக நடித்து வரும் நடிகை பிரியங்கா தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்திருக்கிறார்.

எப்போதும் சீரியல் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் நடிகை பிரியங்கா, தற்போது கிடைத்துள்ள சிறிய பிரேக்கை தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி வருகிறார். அந்த வகையில் விமான நிலையத்தில் வைத்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எடுத்துள்ள வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை பிரியங்கா, ‘நான் இப்போது விடுமுறையில் இருக்கிறேன். இந்த இடைவெளியை எனது குடும்பத்தோடு கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிரேக் எனக்கு தேவைப்படுகிறது’ என்று உற்சாகமாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here