மத்திய அரசில் 150+ காலியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை | BE / B.Tech தேர்ச்சி..!

0
மத்திய அரசில் 150+ காலியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை | BE / B.Tech தேர்ச்சி..!
மத்திய அரசில் 150+ காலியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை | BE / B.Tech தேர்ச்சி..!
மத்திய அரசில் 150+ காலியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை | BE / B.Tech தேர்ச்சி..!

டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (CDOT) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Registrar, Chief Finance Officer, Senior Manager/ Manager & Technology Development பணிக்கான காலியிடங்கள் நிரப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • டெலி மேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தில் Registrar, Chief Finance Officer, Senior Manager/ Manager & Technology Development போன்ற பணிகளுக்கு என மொத்தம் 165 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் CA / ICWA / MBA / B.Tech (EC/ CS) / M.Tech (EC / CS) / PhD போன்ற ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • Registrar / Chief Finance Officer பணிக்கு 50 வயது என்றும், Sr. Manager/ Manager / Technology Development பணிக்கு 45 வயது என்றும் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு பணியில் அமர்த்தப்படும் போது மாத ஊதியமாக ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை பதவியை பொறுத்து அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக எழுத்து தேர்வுகள் ஏதுமின்றி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CDOT விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!