CDAC நிறுவனத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
CDAC நிறுவனத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CDAC நிறுவனத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CDAC நிறுவனத்தில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) ஆனது அவ்வப்போது அதன் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது Senior Technical Assistant மற்றும் Technical Assistant பணிக்கென 4 காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்ககளும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 22.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CDAC காலிப்பணியிடங்கள்:
  • Senior Technical Assistant ( Vulnerability Assessment & Penetration Testing – VAPT ) – 1 பணியிடங்கள்
  • Technical Assistant – ( Vulnerability Assessment & Penetration Testing – VAPT ) – 2 பணியிடங்கள்
  • Senior Technical Assistant ( Network Administrator ) – 1 பணியிடங்கள்

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மைய கல்வி தகுதி:

Level 7 : – Member Technical Staff B1 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering / Computer application அல்லது Degree in Computer Science / Electronics / IT/ Computer application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 6 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Level 6 : -Member Technical Staff B2 (MTS B2) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering / Computer application அல்லது Degree in Computer Science / Electronics / IT/ Computer application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

CDAC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மைய ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CDAC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் முன் அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மைய விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்றவர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!