CDAC நிறுவனத்தில் 130 காலிப்பணியிடங்கள் – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
CDAC நிறுவனத்தில் 130 காலிப்பணியிடங்கள் - B
CDAC நிறுவனத்தில் 130 காலிப்பணியிடங்கள் - B
CDAC நிறுவனத்தில் 130 காலிப்பணியிடங்கள் – B.E./ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
C-DAC நிறுவனத்தின்  வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில்   Project Engineer, Senior Project Engineer, Senior Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கு காலி பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Development of Advanced Computing
பணியின் பெயர் Project Engineer, Senior Project Engineer, Senior Technical Assistant and Other posts
பணியிடங்கள் 130
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
C-DAC காலிப்பணியிடங்கள்:
C-DAC நிறுவனத்தின் அறிவிப்பின்படி Project Engineer, Senior Project Engineer, Senior Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கென்று மொத்தம் 130 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
C-DAC கல்வித்தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் விண்ணப்பதாரர்கள்,
  • Project Engineer பணிக்கு B.E. / B.Tech / MCA / M.E / M.Tech போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Technical Assistant பணிக்கு Electronics  / IT /  Computer applications பாடப்பிரிவுகளில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
  • Adjunct Engineer பணிக்கு CSE / ECE / IT / IS பாடப்பிரிவுகளில் B.E  / B.Tech / ME / M Tech / Ph D வைத்திருக்க வேண்டும்.
C-DAC முன் அனுபவம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து, குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 9 வருடங்கள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
C-DAC ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாகும் பதவியின் தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் ரூ.35,400/- முதல் ரூ.44,900/- வரை   மாத  ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
C-DAC தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
C-DAC விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்ப கட்டணங்கள் ஆன்லைன் மூலம் செலுத்திக் கொள்ளலாம் குறிப்பிடப்பட்டுள்ளது.
C-DAC விண்ணப்பிக்கும் முறை:
இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!