CDAC கணினி மையத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) கடந்த சில தினங்களுக்கு முன்பு Project Associate, Project Technician பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு என தற்போது 14 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
C-DAC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் Project Associate பணிக்கு என 06 பணியிடங்களும், Project Technician பணிக்கு என 08 பணியிடங்களும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science / Computer Application பாடப்பிரிவில் B.E, B.Tech, M.E, M.Tech, Post Graduate, Ph.D ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருப்பது அவசியமானது.
TN Job “FB
Group” Join Now
- Project Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science / Electronics / IT / Computer Applications போன்ற பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Diploma முடித்தவராக இருப்பது அவசியமானது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சமாக 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களுக்கு 05 வருடம் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய விரிவான தகவல் அறிவிப்பில் பார்க்கவும்.
- Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.34,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
NPCIL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
- Project Technician பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.22,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
C-DAC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (16.06.2022) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவதால், இன்றே விண்ணப்பித்து பயனடையவும்.