தமிழகத்தில் பேருந்துகளில் “சிசிடிவி கேமரா” ? போக்குவரத்து துறை தகவல்!

0
தமிழகத்தில் பேருந்துகளில்
தமிழகத்தில் பேருந்துகளில் "சிசிடிவி கேமரா" ? போக்குவரத்து துறை தகவல்!
தமிழகத்தில் பேருந்துகளில் “சிசிடிவி கேமரா” ? போக்குவரத்து துறை தகவல்!

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமாக 31 பணிமனைகளில், 3,454 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் தினசரி சராசரியாக 27.58 லட்சம் பயணிகள் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகர பஸ்களில் நடக்கும் பல குற்றங்களை தவிர்க்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து உயர் ரக சிசிடிவி கேமராக்களை வாங்கி பஸ்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது

போக்குவரத்து துறை அதிகாரி தகவல்:

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்களை அடையாளம் காட்டும் வகையில் ‘பிங்க்’ நிறத்தில் பேருந்துகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அதாவது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் பொதுமக்களின் வசதிக்காக, குறிப்பாக பெண்களின் வசதிக்காக பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அந்த வகையில் தற்போது மாநகர பேருந்துகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பு, மாணவர்களின் பஸ் படிக்கட்டு பயணம், ஓடும் பேருந்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து உயர் ரக சிசிடிவி கேமராக்களை வாங்கி பஸ்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகர் போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக எம்டிசி பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்கள் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் மற்றொரு காரணம் பெட்ரோல் விலை உயர்வு ஆகும். இதையடுத்து பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பெண்களை குறிவைத்து சிலர் அடிக்கடி தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது . இதுதவிர பஸ்களில் செயின், பணம் திருட்டு அதிகரித்து வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேருந்துகளின் படிகளில் தொங்குவது, பஸ் மீது ஏறி நின்று சேட்டைகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் வகையில் எம்டிசி பேருந்துகளில் முதல் கட்டமாக ‘நிர்பயா’திட்டத்தின் கீழ் 2,500 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

தற்போது வரை ஒவ்வொரு பேருந்திலும் தலா 3 கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தமாக 1,000 எம்டிசி பேருந்துகளில் இத்தகைய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர 4 அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனில் இயங்கும், ‘மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர்’ஆகியவையும் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 1,500 பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கேமிராக்களை வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!