CCL நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ. 2,90,000/-

0
CCL நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ. 2,90,000/-
CCL நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ. 2,90,000/-

Director (Personal), Jr. Chemist, Jr. Technical Inspector ஆகிய பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (CCL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிமையான முறையில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Coalfields Limited (CCL)
பணியின் பெயர் Director (Personal), Jr. Chemist, Jr. Technical Inspector
பணியிடங்கள் 106
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2022 & 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Central Coalfields Limited பணியிடங்கள்:

சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (CCL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Director (Personal) – 01 பணியிடம்

Jr. Chemist – 23 பணியிடங்கள்

Jr. Technical Inspector – 82 பணியிடங்கள்

CCL கல்வி விவரம்:

Director (Personal) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Graduate Degree, MBA, PGDM, PGPM Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Jr. Chemist, Jr. Technical Inspector பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Science with Chemistry பாடப்பிரிவில் Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

CCL வயது விவரம்:

Director (Personal) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 60 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

Jr. Chemist, Jr. Technical Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

CCL ஊதிய விவரம்:

Director (Personal) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,60,000/- முதல் ரூ.2,90,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Jr. Chemist, Jr. Technical Inspector பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் கொடுக்கப்படும்.

Central Coalfields Limited தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Coalfields Limited விண்ணப்பிக்கும் விதம்:

Director (Personal) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் pesb.gov.in என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (18.10.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Jr. Chemist, Jr. Technical Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!